Wednesday, November 30, 2011

இது தாண்டி சினிமா - அத்தியாயம் 4


அந்த சுட்டும் விழி நடிகை கோலிவுட்டில் கோலோச்சிய போது முக்கிய ஹீரோக்கள் ஓரிரு தடவை டச் பண்ணியிருக்கிறார்களே ஒழிய கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் அந்த நடிகையையை யாராலும் கைவிக்க முடியவில்லை. இதற்கு காரணம்... நடிகையை நிழல் போல தொடர்ந்த நடிகையின் அப்பா தான்.

பல நடிகைகள் தன்னுடன் அப்பா வருவதை விரும்பமாட்டார்கள். ஆனால் டீஸண்ட்டான இந்த சுட்டு விழி நடிகையோ தேவையற்ற தொல்லைகளிலிருந்து தப்பிக்க தன் அப்பாவின் பாதுகாப்பை ரொம்பவே விரும்பினார். புரொடியூஸர், டைரக்டர் என்ற போர்வையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் யாராவது நடிகையிடம் ஜொள் விட்டால் அப்பாக்காரர் முறைக்கிற முறையில் அடங்கிப் போவார்கள். அப்பாக்காரரின் லாஜிக்.... ‘நீங்களாத்தானே கால்ஷீட் கேட்டு வந்தீங்க. அதனால் தப்பாட்டமெல்லாம் கூடாது' என்பதுதான்.

இப்படி கெடுபிடியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் அந்த அவதார நடிகர் ஒரு காரியம் செய்தார். நடிகைகளை விதவிதமாக ரசிக்கக் கூடியவர் அந்த நடிகர். ஸ்பாட்டில் கிடைக்கிற கால அவகாசத்தில் மன்மத லீலை பண்ணுவதெல்லாம் அவருக்கு பிடிக்காது. சுட்டும் விழிச் சுடரை நாலைந்து நாட்கள் அமைதியான இடத்திற்கு கொண்டுபோய் லீலை நடத்த விரும்பினார். ஆனால் நடிகையின் அப்பாவுக்கு இந்த நடிகரின் ரசனை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்ததால் மகளுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினார்.ஆனால் அப்பாவின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு மகளை உஷார் பண்ணிக் கொண்டு போய்விட்டார் நடிகர்.

கொடைக்கானலில் நடிகருக்கு சொந்தமான பங்களா உண்டு. அத்துடன் பல ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்ணை நிலமும் உண்டு. அங்கே நடிகையை கொண்டு சென்றுவிட்டார் நடிகர்.

விதவிதமான அசைவச் சமையல் தயாரானது. விருந்தும் நடந்தது. இரவும் ஆகிவிட்டது. குளிரும் எடுக்கிறது. ஆனால் அதுவரை நடிகையை தொடவில்லை நடிகர்.

நள்ளிரவு நேரம். முழு பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது. நடிகையை கூட்டிக் கொண்டு பண்ணைக்குள் நடந்தார் நடிகர். நடுகாட்டில்...... இருந்த நவீன வசதிகள் கொண்ட பரண் அமிக்கப்பட்டிருக்கிறது. ‘ஆலோலம் ச்சோ....” தினைப்புனத்தில் வள்ளி பறவைகளை விரட்டுவாளே... அதுபோன்றதுதான் இந்த பரண். இருவரும் பரணில் ஏறி உச்சிக்குப் போனார்கள்.

பாலாய் ஒழுகிய பௌர்ணமி வெளிச்சத்தில் இருவரும் தேனாக கலந்தார்கள். நிலா விடைபெறுகிற வரைக்கும் இவர்களின் உலா நடந்தது. மதனோற்சவத்தை முடித்துக் கொண்டு மறுநாள் சூரியன் சுட்டெழுப்பியதும் பங்களாவிற்கு திரும்பினார்கள். இப்படியே அந்தரத்தில் நாலுநாட்கள் அந்தரங்கத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.

பாசமுள்ள அந்த அப்பா - மகளுக்கிடையே முதன்முதலாக இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதன் பிறகு செக்யூரிடியை இன்னும் டைட் பண்ணினார் டாடி!

ஆனால்.... அந்த டாடியை டம்மியாக்கியதோடு அப்பா-மகளுக்குள் தனிக்குடித்தனம் போகிற அளவிற்கு பிரச்சனையை மூட்டிவிட்டார்கள். தங்கள் அற்ப சந்தோஷங்களுக்காக ஹீரொக்கள் செய்த மும்பை அழிச்சாட்டியம் தெரியுமா? அது... 

(அடுத்த ஸீன்)...

Subscribe to get more videos :