Thursday, April 7, 2016

முன்னாள் காதலனுக்கு டஃப் கொடுக்கும் சமந்தா


சமந்தாவும், சித்தார்த்தும் ஒருகாலத்தில் காதலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அவர்களின் பிரிவும்.

இருவரும் கா விட்டு பிரிந்தாலும் அவ்வப்போது ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்யாவிடில் இருவருக்குமே தூக்கம் வராது. முக்கியமாக சமந்தாவுக்கு.
 
கன்னடத்தில் பவன் குமார் இயக்கிய லூசியா படத்தின் உரிமையை வாங்கிய சித்தார்த், அதன் தமிழ் ரீமேக் எனக்குள் ஒருவனில் நடித்தார். படம் ப்ளாப். சித்தார்த் மண்ணை கவ்விய கிரவுண்டில் சிக்சர் அடிக்க நினைக்கிறார் சமந்தா.
 
பவன் குமாரின் புதிய படம், யு டர்ன். நாயகி மையத்திரைப்படம். அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க சமந்தா ஆர்வம் காட்டுகிறார். தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, தமிழில் அவரே தயாரித்து நடித்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள், சமந்தாவின் ஆர்வத்தை கவனித்தவர்கள். எதிரி வீழ்ந்த இடத்தில் வெற்றிக் கொடிகட்டத்தான் வீரனுக்கும் ஆசை, காதலிக்கும் ஆசை.

Subscribe to get more videos :