கிரகம் சும்மாயிருந்தாலும், கரன்ஸி கதற வைக்கும் என்பதற்கு பெரிய உதாரணம் சிம்ரன் விஷயம்தான். நான் இன்னும் அழகாதானே இருக்கேன். அதுக்குள்ளேஎதுக்கு
கன்னட திரையுலகில் சூப்பர் நடிகராக திகழும் உபேந்திராவுக்கே அம்மாவாக நடிக்கிறாராம். உபேந்திராவே ஐம்பதை கடந்தவர். இவருக்கு அம்மா என்றால் எப்படியிருக்கும்?
தமிழில் படங்களே இல்லாமலிருக்கும் சிம்ரன், சின்னத்திரையில் மட்டும் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். கன்னட படவுலகம்தானே? இமேஜுக்கு பங்கமில்லை என்பதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் அவர். ஆனால் படத்தின் ஹீரோ உபேந்திரா, ஏற்கனவே ஏ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர்தான் என்பதாலும், விஷாலின் சத்யம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் என்பதாலும், இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
தகவல் தெரியுமா தாயீ?