சினிமாவில் பெண்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல!
சினிமா வெளிச்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் மின்னினாலும் அந்த மின்னல்களுக்குப் பின்னால் பல இன்னல்கள் ஒளிந்து கொண்டே இருக்கிறது!
ஹாலிவுட் நடிகையும் உலகையே தன் அழகால் வசீகரித்துக் கொண்ட அழகியுமான மார்லின் மன்றோவை யாராலும் மறக்க முடியாது! இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் பலரின் கனவுக் கன்னியாகவே இருக்கிறார் அந்த கருப்பு வெள்ளை நாயகி! அந்த தேவதைக்கு உலகில் சென்ற இடமெல்லாம் சிறப்பு! ஆனால் அவருக்கோ ஏன் தான் நடிகையானோம் என்கிற வெறுப்பு!
வெளியே சிரித்து உள்ளே அழுது கொண்டிருந்தார் அந்த அழகு தேவதை!
அழகு தேவதை ஏன் உள்ளுக்குள் அழுகுணி தேவதையாக இருந்தார்?
மார்லின் மன்றோவின் உறவுக்காரப் பெண் ஒருவர் சமீபத்தில் மார்லின் பற்றி ஒரு விரிவான பேட்டி கொடுத்திருந்தார்! அந்த உறவுக்காரப் பெண் அந்த பேட்டியை கொடுக்கும் போது கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது! அது அந்தப் பெண்ணின் கண்ணீர் அல்ல.... அந்த கண்ணீரில் மார்லினின் கண்ணீரும் இருந்தது என்றே சொல்லலாம்!
“மார்லின் மிக அழகாக இருப்பதாக எல்லோரும் அவரை புகழ்வார்கள்! ஆனால் அழகாகப் பிறந்ததற்காக மார்லின் பலமுறை மனமுடைந்து அழுதிருக்கிறார்! சாதாரண குடும்பப் பெண்ணாக வாழ்வதுதான் பெரிய கொடுப்பினை! ஆனால் எனக்கு அந்த பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே!' என பலமுறை அவர் கவலைப்பட்டிருக்கிறார்! செக்ஸ் என்பது ஆண்-பெண் விருப்பத்தின் பேரில் அமைவது! ஆனால் மார்லினின் விருப்பம் இல்லாமலேயே தினசரி அவர் செக்ஸ் சக்கடங்களை அனுபவித்தார்! அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும், அதிகாரவர்க்கமும் அவரை பாடாய்ப்படுத்தி விட்டது! இந்த மன உளைச்சல் காரணமாகவே தினமும் தூக்கமாத்திரை இல்லாமல் அவரால் தூங்கமுடியவில்லை! எப்போதாவது நேரம் கிடைத்தால் பாத்ரூமில் ரொம்ப நேரம் இருந்து நிம்மதியாக குளிப்பார்! அந்த குளியல்தான் அவருக்கு சந்தோசமான விஷயம்! ஏன் இவ்வளவு நேரம் குளிக்கிறீர்கள்? என்று கேட்டால்.... எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் பாவிகள் என்னை சாக்கடையில் தள்ளுகிறார்கள்! நான் அந்த சாக்கடையிலிருந்து மீள முடியாது! ஆனால் அந்த கறையை குறைந்தபட்சம் கழுவிக் கொள்வதாக நினைத்துத்தான் ரொம்ப நேரம் குளிக்கிறேன்!'என்பார்!”
இப்படி அந்த தேவதையின் தீய்ந்து கருகிய மனசை படம்பிடித்து காட்டியிருக்கிறார் அந்த உறவுப் பெண்!
கிட்டத்தட்ட 80-களில் குமுதம் பத்திரிகை ஒரு முக்கிய நடிகரிடம் பேட்டி கண்டது! அதில் ஒரு கேள்வி...
நடிகைகள் சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு அந்த விஐபி நடிகர் சொன்ன பதில்........
‘டைரக்டர்களுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்!”
ஆக சினிமாவில் எப்போதுமே பெண்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது! அதனால் தான் இந்த தொடருக்கு இதுதான்டி சினிமா என தலைப்பு!
அது சரிப்பா.... அப்படி ஒரு பதிலைச் சொன்ன விஐபி நடிகர் யார்? நம்ம கோலிவுட் மார்லின் மன்றோக்களின் நிலை என்ன? என்கிறீர்களா?
அதற்கான பதில்.......
(அடுத்த ஸீன் )
நன்றி தமிழ்சினிமா இணையதளம்