மூடிவெச்ச காதல் இப்ப முச்சந்தியில் நின்னு சிரியோ சிரிக்குது. அட நம்ம சினேகா-பிரசன்னா காதல் தான் சொல்றேன். இவர்களின் பிளாஷ்பேக் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். அப்போ ஜனா என்ற தமிழ் படத்தில் அஜித்துடன் நடித்துக் கொண்டிருந்தார் சினேகா, பிரசன்னா 5 ஸ்டார் என்ற படத்தில் நடித்த புதுமுக ஹீரோ. ”அது” என்ற படத்தில் நடிக்க பிரசன்னா ஒப்பந்தம் ஆகியிருந்த நேரத்தில் அந்த படத்தின் நாயகியாக நடிக்க சினேகாவை அனுகியுள்ளனர்.
அப்போது அவர் சொன்ன பதில் இது தான். நான் இப்போ அஜித் கூட நடிக்கிறேன். இந்த சமயத்தில் யாரோ புதுமுக ஹீரோவுடன் நடிக்க முடியாது. வேணும்னா நீங்க ஹீரோவ மாத்துங்கன்னு சொன்னாங்களாம். அதன் பின்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஹீரோவையும் மாற்றி அந்த படத்தின் தலைப்பையும் மாற்றி எடுத்தனர் (படம் ஓடல அது வேற விஷயம்)...
பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இருவரும் ஒப்பந்தம் ஆனார்கள், அப்படத்தின் ஷீட்டிங் நடக்கும்போதே இருவருக்கும் காதல் என்ற கிசுகிசு பரவ ஆரம்பித்தது. இதை இருவருமே மறுத்துவந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வது என இவர்களது சுற்றும் படலம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அப்பப்போ மீடியாவிடம் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என சீறினார்கள்..
இது குறித்து தமிழ்சினிமா இணையதளத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான செய்தி ஒன்று... http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/september/150908a.asp
இப்போது அதை பிரசன்னா மறுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் விரைவில் இரு வீட்டு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதை இன்னும் சினேகா தரப்பில் இருந்து உறுதிபடுத்தவில்லை என்பது குறீப்பிடத்தக்கது..

