பாடிவிட்டார். பாட்டும் எழுதி விட்டார். தனுஷின் அடுத்த அவதாரம் எது? கேள்விப்பட்டால்
கெக்கே பிக்கே என்று நீங்கள் சிரிப்பது நிச்சயம். இவரது அடுத்த அவதாரம்
ஆதிவாசி கெட்டப். சிம்புதேவன் இயக்கவிருக்கும் மாரீசன் என்ற படத்தில்
நான்கு கெட்டப்புகளில் நடிக்கப் போகிறாராம் தனுஷ். அதில் ஒன்றுதான் இந்த
ஆதிவாசி கேரக்டர்.
சிலர் எடுக்கும் சரித்திரப்படங்கள்
தியேட்டரில் ஏகப்பட்ட கொட்டாவிகளை வரவழைத்து வானிலை அறிக்கை சொல்கிற
அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் சிம்பு தேவன் கதைகள் அப்படியல்ல.
சரித்திர பின்னணியோடு எடுக்கப்பட்டாலும், அதில் காமெடியை தூவி
கலகலப்பாக்கிவிடுவார்.
முதல் படத்தில் வடிவேலு, அதன்பின் லாரன்ஸ்
என்று இடையில் சந்தானம் கஞ்சா கருப்பு என்று தனக்கென்று தனி ஸ்கெட்ச்
போட்டு வரும் சிம்புதேவனுக்கு இந்த படத்தில் தனுஷே கிடைத்திருக்கிறார்.
சும்மாவே கலகல டைப் தனுஷ். இதில் சிம்புவின் காம்பினேஷன் வேறு. கேட்க
வேண்டுமா?
சிம்புதேவனுக்காக இதில் கோவணம் கட்டி
நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம் தனுஷ். கல்லூரி பொண்ணுங்க கனவுல
பட்டொளி வீசி பறக்குமோ என்னவோ, இந்த கர்சீப் சைஸ் கோவணம்?