ஆலமரத்திற்கு கீழே பஞ்சாயத்து நடந்தது போக, இப்போது ஆலமரமே பஞ்சாயத்தை கூட்டுகிற
காமெடி நடக்கப் போகிறது. தனது குடும்ப பிரச்சனையை தினந்தோறும்
தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக்கியவர் வனிதா விஜயகுமார். இப்போது இவரே
மற்றவர் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து விடை காண
போகிறாராம். அட நல்லாயிருக்கே என்று ஆச்சர்யப்படுகிறவர்கள் கூசாமல் அடுத்த
பாராவுக்கு போகலாம்.
மீண்டும் தன் முதல் கணவர் ஆகாஷோடு
சேர்ந்துவிட்டார் வனிதா. தனது மகனுக்காக இந்த தியாகத்தை அவர்
மேற்கொண்டிருக்கிறார். இந்த முடிவை அவர் எடுத்து முடிப்பதற்குள்தான்
அவருக்குதான் எத்தனை எத்தனை சோதனைகள், திருப்பங்கள்? இந்த
அனுபவத்தையெல்லாம் ஒன்று திரட்டி, மற்றவர்களுக்கு கவுன்சிலிங் செய்தாலென்ன
என்று யோசிக்க வைத்தாதாம் அவரை.
இந்த நேரத்தில்தான் ஒரு தனியார்
தொலைக்காட்சியும் இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தது. அப்புறமென்ன?
அவரவர் வீட்டில் சத்தமில்லாமல் நடந்து வரும் குடும்ப சண்டைகளை சேனல் மூலம்
தலைப்பு செய்தியாக்கப் போகிறார் வனிதா.
பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் பேர்வழி
என்று அதன்மீது மேலும் பெட்ரோல் கேனை கவிழ்க்கும் இதுபோன்ற
நிகழ்ச்சிகளுக்கென்று ஆட்கள் கிடைக்கிறார்கள் பாருங்கள்... அதுதான் சிறப்போ
சிறப்பு.
நன்றி தமிழ்சினிமா.காம்