Wednesday, November 2, 2011

கற்பழிப்பு காட்சியில் மட்டும் நடிக்க கூப்பிட்றாங்க... ராக்கி ஷவாந்த்..!!!


என்னை கற்பழிப்பு காட்சியில் மட்டும் நடிக்க கூப்பிடுறாங்க, எனக்கு உடம்பை காட்டி நடிக்க பிடிக்கவில்லை என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ராக்கி சாவந்த்.

அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கத்தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க விருப்பமில்லை.

என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது. நான் ஆடும் பாடல்கள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது.

ஆனால் என் பாடல்களை விட ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும். கான், கபூர், பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.
இத்தனை நாட்களாக டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணி அமர்த்தியுள்ளேன். விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம், என்று கூறியிருக்கிறார் ராக்கி.

Subscribe to get more videos :