குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்றால் ஸ்ரீதேவிக்கு
லட்சக்கணக்கான இந்தி ரசிகர்கள் மனக்கோவில் கட்டி ஆராதித்து வருகிறார்கள். ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று 16 வயதில் கும்மாளம் போட்டவர் இப்போது ஆத்தாவாகவே மாறி தோல் சுருங்கினால் கூட அவரது ரசிகர் வட்டாரம் நிலை குலையாது போலிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு "குடும்பம்தான் முக்கியம்" என்று போலிவுட்டுக்கு டாட்டா காட்டிய ஸ்ரீதேவியை அண்மையில் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தின் தயாரிப்பாளர் எப்படியெல்லாமோ பேசி அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் இப்படத்தில் நடித்து முடித்த பிறகு, தனக்கு ரசிகர்களிடம் உள்ள புகழையும் பெயரையும் வைத்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் முடிவுக்கு வந்துள்ளாராம் ஸ்ரீதேவி.
மேற்படி படத்தில் ஸ்ரீதேவிக்கு நியூயார்க்கில் வசிக்கும் இல்லத்தரசி வேடம். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு வெளிநாடுகளில் குடும்பம் நடத்தச் செல்லும் இந்தியப் பெண்கள் அந்நாடுகளில் உள்ள மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இந்தத் தடுமாற்றம் அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை தருகிறது. இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன பெண்களும் உண்டு. மேலும் படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..