Wednesday, April 25, 2012

அஜீத்தை தொட்ட கார்த்தி ஒரு வியாபார விறுவிறுப்பு


தென்னை மரத்திற்கும் ஆலமரத்திற்கும் இருக்கிற வித்தியாசம்தான் அஜீத்துக்கும் மற்ற நடிகர்களுக்கும். வேர்களின் நீட்சி ஆலமரத்திற்கு அதிகம். தென்னை மரத்திற்கு சில மீட்டர்கள் வரைக்கும்தான். நாம் சொல்ல வருவது புரிகிறதா? ரஜினிக்கு அடுத்தபடியாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் தனக்கென ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர் அஜீத் மட்டுமே என்கிறது ஒரு புள்ளிவிபரம். அப்படின்னா விஜய்க்கு இல்லையா என்று முண்டா தட்டும் அவரது ரசிகர்கள் கசப்பான உண்மையை புரிந்து கொண்டேயாக வேண்டும். அந்தளவுக்கு இல்லை!

வியாபார விஷயத்தில் மடேர் மடேரென முன்னேறிக் கொண்டிருக்கும் அஜீத்தே கூட, நாம் சொல்லப் போகும் இந்த தகவலை இந்நேரம் அறிந்து வைத்திருப்பார். அல்லது, பிறர் பட செய்தி நமக்கெதுக்கு என்று செவிகளை பூட்டியிருப்பார். (ஏனென்றால் தானுண்டு தன் வேலை மட்டும் உண்டு என்றிருப்பவர் அவர்)

பில்லா-2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியிருக்கிறார். இதன் தமிழக உரிமைக்காக மட்டும் சுமார் 24 கோடிகள் கொடுக்க முன் வந்திருக்கிறார். அஜீத்தின் முந்தைய பட வியாபாரத்தை விட சில கோடிகள் அதிகம் இது. இந்த சந்தோஷ தருணத்தில்தான் இப்படியும் ஒரு வியாபாரம் கோடம்பாக்கத்தில் நடந்து பலரை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தொடர்ந்து செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://bit.ly/Ip0d7s

Subscribe to get more videos :