Wednesday, May 9, 2012

பாலாஜி சக்திவேல் செய்தது சரியா? அதிர்ச்சியில் படவுலகம்


களி மண்ணை பிசைந்து கலைவண்ணம் படைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல் என்பதை நேற்றுதான் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கு எண் படத்தில் வரும் ரோசியக்கா, 'நான் சூளையில பூ வித்துகிட்டு இருந்தேங்க. சாருதான் என்னைய செலக்ட் பண்ணி நடிக்க வச்சு அல்லாரையும் என்னை பாராட்டுற மாதிரி ஆக்கிட்டாரு' என்றார்.
நான் ரெட்ஹில்சுல வீட்டு வேலை செஞ்சுட்டு இருந்தனுங்க. ரெண்டு பொம்பள புள்ளைங்க எனக்கு. நடிக்கிறீயான்னு கேட்டு இட்டுட்டு போனாங்க. அங்க சாரு சொல்லிக் கொடுத்ததை செஞ்சேன். இன்னைக்கு ஊரு உலகமெல்லாம் என்னை பாராட்டுறாங்க. என் குடும்பத்துக்கே விளக்கேத்தி வச்சுட்டாருங்க அவரு என்று கூறுகிற பார்வதியம்மா, படத்தின் ஹீரோயின் ஜோதிக்கு அம்மா.
கரும்பு வெட்டிகிட்டு இருந்தேங்க. அங்க கார்ல வந்தாருங்க டைரக்டரு. வேறொரு ஆளை கூப்பிட்டு வசனத்தை சொல்லி நடிக்க சொன்னாங்க. அவரு தடுமாறுனாரு. நான் இப்படி பேசு. அப்படி பேசுன்னு சொன்னேன். நீ நல்லா பேசுற, நீயே நடியேன்னுட்டாங்க. சாரோட 'காதல்' படத்தை பல முறை பார்த்துருக்கேன். அவரு படத்திலேயே நான் நடிப்பேன்னு நினைக்கலீங்க. - இது ஸ்ரீ யின் அப்பாவாக நடித்திருக்கும் ஒரு நிஜக் கூலித்தொழிலாளியின் குரல்.
ஊர் ஊரா போயி கூத்துல ஆடுறதுதான் என் தொழில். நானெல்லாம் சினிமாவில் நடிப்பேன்னு கனவுல கூட நினைக்கல. என்னை உலகத்துக்கே காட்டிட்டாரு சார். -நிஜக்கூத்துக் கலைஞன் சின்னச்சாமியின் நெகிழ்ச்சியான குரல் இது.
வழக்கு எண் 18/2 படத்தின் சக்ஸஸ் மீட்டில் இப்படி அத்தனை பேரையும் நம் முன்பாக பேசச்சொல்லி நேற்றைய நாளின் சில மணி நேரங்களை மிக முக்கியமானதாக்கியிருந்தார் பாலாஜி சக்திவேல். செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :