'அண்ணா' என்கிற வார்த்தையை அழகான பெண்கள் சொல்லும் போதெல்லாம், இளைஞர்களில் பலர் கரண்ட் கம்பியை தொட்டுவிட்டு தப்பிக்கிறார்கள். 'அப்பாடி நம்மளை இல்லேப்பா...' என்று சிலர் அங்கே பெருமூச்சு விட்டார்கள். 'நல்லதா போச்சு' என்று சந்தோஷப்பட்டார்கள் சிலர். (தன் மனைவியோடு இந்த விழாவுக்கு வந்திருந்தார் ஸ்ரீ சரவணன்) நடிகை ரெஜினா, 'நிர்ணயம்' படத்தின் டைரக்டர் ஸ்ரீ சரவணனை 'அண்ணா' என்று அவர் அழைத்த தருணத்தில் இதெல்லாம் நடந்து முடிந்திருந்தது அந்த விழாவில். இந்த இடத்தில் உதவி டைரக்டர்களும் கைதட்டி சந்தோஷப்பட்டதாக அறிவித்தார் தொகுப்பாளர்.
அழகான நடிகைகள் வளர்கிற நேரத்தில் அம்மா கேரக்டர்களில் நடிக்கவே அஞ்சுவார்கள். அவர்களே கொஞ்சம் வளர்ந்துவிட்டால் 'அப்படியொரு கேரக்டர் இருக்கு' என்று சொல்லவே தயங்குவார்கள் டைரக்டர்கள். தமிழ்சினிமாவில் அவ்வப்போது வந்து போகும் இந்த இக்கட்டான சுச்சுவேஷனை மெனக்கெட்டெல்லாம் நொறுக்காமல் இயல்பாகவே நொறுக்கியிருக்கிறார் ரெஜினா. 'நிர்ணயம்' படத்தில் இளமை சொட்ட சொட்ட ஒரு காதல் பாட்டில் விக்ரம் ஆனந்துடன் இழைந்து குழைந்திருக்கும் அவர், அடுத்ததாக திரையிடப்பட்ட பாடலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்திருந்தது இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்களை சற்றே அதிர வைத்தது. செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...