Tuesday, July 30, 2013

பட்டத்து யானை விமர்சனம்



யானையின் வால் இருக்க வேண்டிய இடத்தில் தும்பிக்கை இருந்தால் எப்படியிருக்கும். இந்த பட்டத்து யானையின் சரிபாதி தும்பிக்கையாக சந்தானமும் இருப்பதால், 'இந்த படத்துக்கு யாருதான்யா ஹீரோ?' என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் அவர்! 'அட பேனா மூக்கணுங்களா, நான் வர்றதையா வேணான்றீங்க?' என்று செகன்ட் ஆஃப்பில் சந்தானம் வெகுண்டெழுந்து ஆஃப் ஆகிவிடுகிற அவஸ்தையும் நடக்கிறது. அதற்கப்புறம் படம் எப்படி? ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா? அதேதான்! 

அந்த ஊர்லேயே பெரிய சமையல்காரர் என்று பெயரெடுத்த சந்தானத்திடம், அதே ஊரில் இருக்கிற பெரிய ரவுடியும் தன் கல்யாண ஆர்டரை கொடுக்கிறான். சொந்த பொங்கலிலே சூனியத்தை வைப்பானேன் என்று சந்தானத்தின் அப்ரசன்டுகள் அவரை விட்டு ஓட, இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கிறார்கள் விஷால் அண் கோவினர். இவர்கள் பண்ணுகிற குழப்பத்தில் ஊரைவிட்டே கிளம்புகிறது சமையல் கோஷ்டி. திருச்சிக்கு இடம் பெயர்கிற இவர்களில் விஷாலின் கண்ணில் விழுகிறார் ஐஸ்வர்யா. கண்டதும் காதல். 

விஷால் வெளியூருக்கு பஸ் ஏறினாலே அங்கே நாற்பது கொலைகளும், நாலைந்து ரேப் முயற்சிகளும் நடக்குமல்லவா? நடக்கிறது. வெகுண்டெழும் விஷால், காதலி ஐஸ்வர்யாவுக்காக முஷ்டியை து£க்க, வில்லன் ஹீரோ 'வார்' ஸ்டார்ட் ஆகிறது. 

ஒரு ஆக்ஷன் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அதையெல்லாம் கச்சிதமாக நிறைவேற்றி ஐஸ்சின் மனசில் விஷால் இடம் பெறுவதுதான் க்ளைமாக்ஸ். 

பூபதி பாண்டியன் படம் என்பதால் சிரிப்புக்கு கியாரண்டி. கொடுக்கிற ரூபாய்க்கும் வாரண்டி என்று உள்ளே நுழைகிறது ரசிகர் கூட்டம். 'படமே பஃபே சிஸ்டம்தான். என்ன வேணுமோ, எடுத்துக்கோங்க' என்று அத்தனை டைப் சீன்களையும் வைத்து படத்தை முடித்திருக்கிறார் 'பூ'-பதி பாண்டியன். 

கையில் கரண்டி, கரைபுரண்டோடும் நகைச்சுவை, தேவைப்பட்டா நெருப்பையும் கக்குவோம்ல... என்று முழு தாக்குதலுக்கு தயாராகவே நிற்கிறார் விஷால். ஆஜானுபாகுவான உயரத்தை குறுக்கிக் கொண்டு இவர் செய்யும் காமெடி பாடி லாங்குவேஜ் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஐஸ்வர்யாவிடம் பையை தொலைத்துவிட்டு, அது தொலைந்து போன துக்கம் கூட இல்லாமல் ஜொள்ளாபிஷேகம் செய்வதுதான் நெஞ்சு பொறுக்குதில்லையே டைப்! எந்த ஹீரோ அடித்தாலும் 'மேலே ரோப் இருக்கு. சைட்ல பில்லோ இருக்கு' என்றெல்லாம் யோசிக்கும் ரசிகனின் ஞானக் கண், விஷாலின் அடியை மட்டும்... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :