1. வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது தப்பி ஓட முடிவெடுப்பார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டால், மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல், அந்த புதிய உறவுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இப்படி செய்யும் போது, இவ்வகை குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி, மற்றொரு துணையுடன் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அதனால் மனைவியை ஏமாற்ற முற்படுவார்கள்.
2. சில ஆண்களுக்கு ஒரே மாதிரி செல்லும் திருமண வாழ்க்கை அலுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வகை ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் புது உறவில் ஈடுபடுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அலுப்புத் தட்டும் உறவை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அதிலிருந்து விலகி புது உற்சாகத்தை பெற புது உறவையே நாடுவார்கள். சிக்கலில் இருக்கும் அலுப்புத் தட்டிய உறவை சரி செய்வதை விட, புது உறவில் உடனடியாக ஏற்படும் மன நிறைவையே அவர்கள் விரும்புவார்கள். இவ்வகையான புது உறவு அவர்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தரும். அந்த தைரியத்தில், அவர்கள் இடர்பாடுகளை சந்திக்க தயாராகி விடுவார்கள்.
3. உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதன்மையான பங்கை வகித்து வருகிறது. சில ஆண்கள் ஒரே மனைவியுடன் வாழ்நாள் முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வதில் திருப்தி அடைவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ உடலுறவை பல பெண்களிடம் வைத்துக் கொள்ள அலாதி பிரியம் ஏற்படும். புது வகை இன்பங்களை சோதித்து பார்க்க, பல பெண்களிடம் பல முறை உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் இவ்வகை உறவு வைத்துக் கொள்ளும் முன்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...