Friday, February 10, 2012

ஒரு நடிகையின் வாக்குமூலம் - திரை விமர்சனம்


சினிமாவில் மின்மினி பூச்சிகளாய் மின்னிக் கொண்டிருந்து மறைந்த நடிகைகளுக்கு சமர்ப்பணத்துடன் ஆரம்பமாகிறது இப்படம். நடிகைகள் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்படுவதை சொல்ல முயற்சி செய்கிறது.

பிரபலமாகி வரும் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேலும் விளம்பரத்தை பெருக்க புது நிகழ்ச்சிக்காக நடக்கும் கூட்டத்தில் சீனியர் ரிப்போர்ட்டரின் ஐடியா அனைவரையும் கவர்கிறது. சினிமாவில் பிரபலமாக இருந்து பிறகு இருக்கிற இடமே தெரியாமல் போன ஒரு நடிகையின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போடுவதே அந்த புரோகிராமின் மெய்ன் கான்செப்ட்.

தேடலில் கிடைக்கும் நடிகை தன்னைப்பற்றிய ரகசியங்களை சொல்ல முடியாமல் ஒரு டைரியை கொடுத்து விட்டு சொல்கிறார் மீத படத்தை டைரியை படிக்க விசுவல் விரிகிறது.

ஊரில் ஏற்படும் அவமானத்தைப் போக்க வறுமையில் வாடும் கூத்தாடிக் குடும்பத்தை சேந்த கிரிஜா தன் மகளை நடிகையாக்கும் சபதத்துடன் சென்னைக்கு வந்து ’’பலான பலான’’ போராட்டத்திற்கு பிறகு மகளை நடிகையாக்குகிறாள். பிரபல நடிகையான பிறகு அந்த நடிகையின் மனப்போராட்டம் தான் வாக்குமூலமாக சொல்லப்படுகிறது.

காபி சாப்பிடுவது போல் சில விசயங்கள் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் பணம், பிரபலம் எல்லாம் கிடைக்கும் என்றால் எதையும் செய்ய சில பெண்கள் முடிவு எடுக்கிறார்கள்.தேடி வந்த வாய்ப்புக்காக கையை விட்டு போய்விடக்கூடாது என முடிவு எடுப்பதால் மகளை ஆண்களின் இச்சைக்கு ஆளாக்குகிறாள் கிரிஜா.

அம்மாவிற்கான வேலையை விட்டு விட்டு வேறு வேலையை பார்க்கிறாள். மகளை முதன்முதலில் ஒருத்தனுடன் உள்ளே அனுப்பி விட்டு நான் பட்ட அவஸ்தை இருக்கே எனும் போது ஏண்டி அனுப்பி இப்படி பொழப்பு நடத்துறிங்கன்னு கேட்க தோணும் சினிமாவுல இதெல்லாம சாதாரணமப்பா என்று போக வேண்டி இருக்கிறது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Subscribe to get more videos :