ஆர்யா, அமலா பால் நடிக்கும் வேட்டை படம் கிட்டத்திட்ட முடியும் தருவாயில் உள்ளது... தனது கண்களால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆட்டிப்படைக்கும் அமலாவை சந்தித்த நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தான் இப்போது ஆர்யாவை ஜில் ஜில் ஆக்கியிருக்கிறது...
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது
சாக்லேட் பாய் ஆர்யாவுடன் நடிக்கும் அனுபவம் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அமலா பால் “நீங்கள் நினைப்பது போல் ஆர்யா ஒன்றும் சாக்லேட் பாய் இல்லை. அவர் மிகவும் மெச்சூர்டானவர். அவரின் நடிப்பு, பேச்சு எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது, அவரின் சிந்தனைகள் மிகவும் வித்தியாசமாகவும், தெளிவாகவும் இருக்கிறது என்று பதில் அளித்தார் அவர்.
இது போதாதா நிருபர்களுக்கு ஆர்யாவும், அமலாவும் லவ் பண்றாங்கன்னு கதை கட்டி விட்றதுக்கு...