கோடி கோடியா சம்பளம் தந்தாலும் (அதுக்கெல்லாம் கூட ஆள் இருக்கா?) ஆன்ட்ரியா மனசு வைத்தால்தான் கால்ஷீட். வேவ்லெங்த் ஒத்துப்போகணும். இல்லைன்னா கதை கேட்க கூட மேடம் தயாராக இருக்க மாட்டார். இதன் காரணமாகவே ஆன்ட்ரியா நடிக்கும் படங்கள் அருகிக் கொண்டிருக்கின்றன. பாட்டு பாட போனாலும் இதே கண்டிஷன்தானாம்.
ஆனால் பெண் என்றால் இந்த நிபந்தனைகள் சுருங்கிவிடும் போலிருக்கிறது. ஆன்ட்ரியா 'மனதார' நடித்துக் கொண்டிருக்கும் படம் திருப்பங்கள். சாரதா ராமநாதன் என்ற பெண் இயக்குனரின் படைப்பு இது.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். நமக்கு ஒருநாள் செய்தியாகிவிடும் இந்த சம்பவங்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தை எப்படியெல்லாம் துவைத்து காயப் போடுகிறது என்பதுதான் கதையின் நாட்.
ஆன்ட்ரியாவுடன் நந்தாவும் நடிக்கிறார். எப்பவும் உடம்பை விறைத்துக் கொண்டே நிற்கும், நடக்கும் நந்தா, இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோ என்பதை சொல்லாமல் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஆன்ட்ரியா?
சண்டையே போட்டுருக்காராம். பறந்து பறந்து அடிக்கிற ஆன்ட்ரியாவை பார்க்கவாவது தியேட்டரில் கூட்டம் வரும்!
ஆர்.எஸ்.அந்தணன்...