தானாக ஓடினாரா, அல்லது வெளிநாட்டுக்கு விரட்டப்பட்டாரா
என்பதை அவரே சொன்னால்தான் தெரியும். அந்தளவுக்கு மர்ம முடிச்சில்
சிக்கியிருக்கிறது சோனாவின் வெளிநாட்டு
பயணம். பார்ட்டி விஷயத்தில் பார்ட் பார்ட்டாக கழற்றப்பட்டார்கள் பாடகர்
சரணும், நடிகை சோனாவும். யார் மேல் தப்பு என்று விடாமல் தொடர்ந்தன
வாதங்கள். எதிர்வாதங்கள். எப்படியோ ஒரு வழியாக போலீஸ் ஸ்டேஷனில் வைத்து
சமாதானப்படுத்தப்பட்டார்கள் இருவரும்.
மனம் கொள்ளாத வருத்தத்திலிருக்கிறேன். அதனால் ஆறு மாதத்திற்கு இந்த பக்கமே வர மாட்டேன் என்று நெருக்கமானவர்களிடம் கூறிவிட்டு வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார் சோனா. இந்த நிலையில்தான் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சோக்காலி என்ற படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க முடிவு செய்தார்கள் அப்படக்குழுவினர்.
சோனா இல்லாமல் சோக்காலி எப்படி நகரும்? அவருக்கு போன் அடித்தால் அத்தனையும் சுவிட்ச் ஆஃப். எந்த நாட்டில் இருக்கிறார் என்பதே தெரியாமல் தடுமாறியவர்கள் ஒருவழியாக அவரை லைனில் பிடித்துவிட்டார்கள். இப்பதான் பணத்தை புரட்டி ஷுட்டிங் வச்சுருக்கோம். தயவு பண்ணி வந்திருங்க என்று கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய சோனா தனது துக்க பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னைக்கு திரும்புவதாக உறுதியளித்திருக்கிறாராம்.
இதற்கிடையில் முன்னணி புலனாய்வு இதழில் தனது இத்தனை ஆண்டுகால கலைப்பயணத்தின் கலவர நிலவரங்களை எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார் சோனா. இதனாலும் பல்ப் பியூஸ் ஆகிற அளவுக்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள் திரையுலக முக்கியதஸ்ர்கள் சிலர்.