Monday, November 7, 2011

ரா-1 விமர்சனம்

எப்போதுமே வீடியோகேம் பற்றியே நினைப்பில் இருக்கும் அர்மான்வர்மா, வில்லனுக்கு ரூல்ஸ் கிடையாது அவன் ஜெயிக்கனும் என்பது மட்டுமே லட்சியமாக இருக்கும் என நினைப்பவர். அவனின் அப்பா நேர்மை, நியாயம் பேசும் வீடியோகேம் தயாரிப்பு வல்லுனர் ஷாருக்கான். திருடன் மிரட்டும் போது நாம ரெண்டு பேர் சேர்ந்து அடிச்சுரலாம்பா என்று சொன்னால் ஷாருக் திருடனுக்கு பணம் கொடுத்துவிட்டு அமைதியாவார். அந்த அளவுக்கு மகனுக்கும் அப்பாவுக்கும் வேற்றுமை .

மகனை கவரும்படி எதாவது செய்ய நினைப்பவர், வில்லனுக்கு அதிக பலம் கொடுத்து அவனை ஜெயிக்க 0.001 அளவு கொண்ட ஹீரோ என வீடியோகேம் உருவாக்குகிறார். வில்லன் தான் ரா ஒன், ஹீரோ தான் ஜி ஒன் . சோதனை முயற்சியில் ஷாருக் மகன் விளையாடுகிறான். மொத்தம் 3 லெவல் கொண்டுள்ள கேமில் 2 லெவலில் வெற்றி பெற்று பாதியில் விட்டு போகிறான். தொழில்நுட்ப கோளாரால் வீடியோகேமில் இருக்கும் ரா ஒன் உயிர் பெருகிறது. அவனை கொல்ல வெளியே வருகிறது.

அதை தடுக்க ஜி ஒன்னும் உயிர்ப்பிக்கப்படுகிறது. முடிவு எல்லாம் சுபமே, ஆனால் படத்தின் பாதியிலயே ஷாருக் கொல்லப்படுகிறார். மீத காட்சிகளுக்கு ஜி ஒன் ரூபத்தில் பூர்த்தி செய்கிறார்.

தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு படம் பிடித்து இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக மும்பை ரசிகர்களுக்கு பிடிக்கும் அதை கவனத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவுக்கு புதிய கதை ஒன்னும் இல்லை. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்பதே சூப்பர் ஸ்டாரின் எந்திரன் தந்த தைரியம் ஷாருக்கானை இப்படி படம் எடுக்க வைத்து இருக்கிறது எனலாம். சூப்பர் ஸ்டார் ரஜினி வந்து போகிறார். (ஏன்...?) திரையரங்கில் விசில் பறக்கிறது. ஆனால் அவர் படத்தில் ஒன்னும் செய்யல...

டெர்மினேட்டர்(2)ஜட்ஜ்மெண்ட்டே, ஸ்பைகிட்ஸ்(3), எந்திரன்...

மேலும் படிக்க... www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2011/raone.asp

Subscribe to get more videos :