முதல் படம் கற்றது தமிழ். அந்த பெயரை நிலை நாட்டுவதற்காகவே தமிழ் கற்று
தேறிவிட்டார் அஞ்சலி. அக்ஷர சுத்தமாக அவர் பேசும் தமிழ் கேட்டால்
அதற்காகவே நாலு வெண்பாவை மெனக்கெட்டு எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கலாம்.
தமிழில்தான் தேறியாச்சே, அப்புறம் வட்டார பாஷையில் கலக்க வேண்டியது தானே? அதிலும்
விடாப்பிடியாக நின்று கன்னியாக்குமரி தமிழ் பேசி இருக்கிறாராம் அஞ்சலி.
இவரது நடிப்பில் இந்த வாரம் வெளிவரப்போகும் தம்பி வெட்டோத்தி சுந்தரம்
படத்திற்காகதான் இப்படி ஒரு அர்ப்பணிப்பு. இவரது காரின் மீது கல்வீச்சு
நடந்த பின்பும் அப்படத்தில் துணிச்சலோடு நடித்து முடித்துக் கொடுத்தது
இன்னொரு அர்ப்பணிப்பு.