பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டுள்ள இந்திய வம்சாவழியான சன்னி லியோனி. கனடிய ஆபாசப் படங்களில் நடிக்கும் சன்னி லியோன், படு கவர்ச்சியான உடையில் வந்து அசத்துவார் என எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, படு அடக்கமான உடையுடன் வந்து சேர்ந்துள்ளார்.
இந்திய டைப் ஜாக்கெட் அணிந்து இந்தியப் பெண்ணாக வந்த சன்னியை, எட்டு ஆண்கள் சேர்ந்து ஒரு பல்லக்கில் வைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் தூக்கி வந்தனர்.
பல்லக்கை விட்டு இறங்கிய சன்னி, தஷன் படத்தில் இடம் பெற்ற சலியா சலியா என்ற பாடல் வரிக்கேற்ப ஒரு சின்ன ஆட்டத்தைப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
இந்திய-கனடிய நடிகை சன்னி. இவர் ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர். படு கவர்ச்சிகரமான இவரது வருகையால் பிக் பாஸ் வீடு, செம ஹீட்டாகும் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக அந்த நிகழ்ச்சியில் தற்போது ஒரு கல்யாணமானவரும், 2 கல்யாணமாகாதா இளைஞர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.