வடிவேலு பாணியில் சொன்னால், 'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்.
ஏழாம் அறிவு இசை வெளியீட்டுவிழாவில், தனக்கும் ஜெய்க்கும் இடையில் 'ஏதோ இருப்பதாக' வாக்குமூலம் கொடுத்து பப்ளிசிட்டி பண்ணியவர்தான் அஞ்சலி. இதை வைத்து இருவருக்கும் காதல் என்று செய்திகள் வரத் தொடங்கின.
இப்போது தனக்கும் 'அந்த நடிகரு'க்கும் (ஜெய்க்கும்) காதல் இல்லை, 'அந்த நடிகரு'டன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று அறிக்கை விட்டார். என்னமோ ஜெய் என்ற நடிகரையே தெரியாது என்ற அளவுக்கு இருந்தது அஞ்சலியின் அறிக்கை.
சும்மா இருப்பாரா 'அந்த நடிகர்'... இப்போது அவரும் பதிலுக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.
"நடிகை அஞ்சலியுடன் எனக்கு காதல் இல்லை. அதே நேரம் நான் நிச்சயமாக ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்'' என்று ஜெய் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "நானும், அஞ்சலியும் `எங்கேயும் எப்போதும்' படத்தில்தான் முதல்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தோம். அதன்பிறகு, '7-ஆம் அறிவு' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான் அவரை சந்தித்தேன்.
இடையில், நாங்கள் வேறு எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. எங்களுக்குள் காதல் இல்லை.
நிச்சயம் நடிகையை மணக்கமாட்டேன்
நான், நிச்சயமாக காதல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன்.
என் கவனம் எல்லாம் என் தொழிலில்தான் இருக்கிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். என் கவனம், அந்த படத்தின் மீதுதான்!,'' என்று ஜெய் கூறியுள்ளார்.
இப்ப இப்படி தான் சொல்லுவீங்க... அப்புறம் நாங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க கால அவகாசம் தேவைபட்டது அதனால் தான் நாங்கள் மறுத்தோம் என்று அறிக்கையெல்லாம் வராமலையா போக போகுது.

ஜெய் நீங்க சொன்னத நம்பிட்டோம் ராசா!