Thursday, November 10, 2011

பாட்ஷா 2 - மீண்டும் அஜித் வெற்றி..!!


ரஜினி படத்தை ரீமேக் செய்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இருந்தாலும் ரஜினி படத்தை ரீமேக் செய்ய யாராரோ போராடினாலும் அது அஜித், தனுஷ் தவிர வேற யாருக்கும் அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.

தற்போது அதே போல் ரஜினியின் பாக்ஸ் ஆபீசில் மிக மிக முக்கியமான படமான பாட்ஷா தற்போது ரீமேக் செய்யப் போகிறார்களா. இந்த அறிய வாய்ப்பு கிடைத்திருப்பது நம்ம தல தான்.

இதற்கிடையில் பாட்ஷா-2 படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ரஜினியை அணுகியபோது ரஜினி சொன்ன ஒரே பதில் அஜித் நடிக்கட்டுமேன்னு இது போதுமே. ஏற்கனவே பில்லா என்ற படத்தை எடுத்து சூப்பர் ஹிட் வெற்றி படமாக்கினார்கள், தற்போது பில்லா-2 என்ற அதன் தொடர்ச்சியில் நடித்து வருகிறார் அஜித். 

இதற்கு முன் இந்தியன் 2 படத்தில் அஜித் நடிப்பதாக வதந்திகள் பரவி பின்னர் அது புஸ்வானம் ஆகி போனது எல்லாம் பழைய செய்தி... அது உண்மை இல்லை என்று பல இணையதளங்கள் நிரூபித்தும் உள்ளன. தற்போது பாட்ஷா 2 என்று மற்றும் ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவ ஆரம்பித்துள்ளது. 

அதிகாரபூர்வமாக செய்தி வெளிவரும் வரை பாட்ஷா 2 வெறும் கானல் நீர் போலதான்...

Subscribe to get more videos :