Monday, December 12, 2011

பஞ்ச் டயலாக் பற்றியெறியும் தீக்குச்சி - ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து


எளிமை, இனிமை, இவை தந்த பெருமை இம்மூன்றாலும் தன்னை நெருங்கி வரும் முதுமையை விரட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவரது பிறந்த நாளை முப்பாத்தம்மன் பால் குடம் மாதிரி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ஊர் முழுக்க. எந்த பண்பலை வானொலியை திருப்பினாலும் ஏய் ஆட்டோக்காரன் என்றோ, ஒருவன் ஒருவன் முதலாளி என்றோ பாடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. சேனல்களிலும் அதே உற்சாக திருவிழா.

உடுக்கை சத்தத்திற்கு முன் ஆடும் பூசாரியின் வேகத்தோடு ரஜினிக்காக தன்னையே தாரை வார்த்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த பிறந்த நாள் மட்டும் இன்னும் இன்னும் விசேஷம். அது ஏன் என்பதை அவ்வளவு அலசி பிழிந்து யோசிக்க தேவையில்லை. இசபெல்லாவில் ஆரம்பித்து சிங்கப்பூர் மருத்துவமனை வரைக்கும் அவரது உடம்பை ரணமாக்கின ஊசிகளும் மாத்திரைகளும். எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு தவித்தான் ரசிகன்.

வாழ்த்துக்களுக்கு நிகராக, விமர்சன அம்புகளுக்கும் நெஞ்சைக் கொடுத்த புண்ணியவான் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அவரை விமர்சித்தவர்கள் கூட, நெஞ்சார பிரார்த்தித்த தருணங்கள்தான் கடந்த சில... மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

Subscribe to get more videos :