Wednesday, February 1, 2012

கேஷுவல் ரஜினி கிர்ர்ரிட வைக்கும் சர்ச்சை


கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தானே புயல்நிவராண நிதிக்காக ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ரஜினி. முதல்வர் வீடும் ரஜினி வீடும் ஒரே தெருவில் இருந்தாலும், இந்த சந்திப்பு முறைப்படி கோட்டையில்தான் நடந்தது.
அங்கு முதல்வரிடம் ரஜினி பேசியது என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது திரையுலகம். ஏனென்றால் ரஜினி அங்கு பேசியது திரையுலகத்தில் தற்போது நிலவி வரும் பெப்ஸி- தயாரிப்பாளர் பிரச்சனை பற்றிதானாம். அதிலும், இவர் ஆதரவாக பேசியது பெப்ஸி தொழிலாளர்களுக்குதானாம்.
ரஜினியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர், விரைவில் இந்த விஷயத்தில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்துவாராம்.
நிதி கொடுக்க போன இடத்தில் இன்னொரு சுவாரஸ்யம். முதல்வரிடம் நிதி வழங்கும் விவிஐபிகள் அந்த காசோலையை ஒரு அழகான பெட்டியில் வைத்துக் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் ரஜினி அதை தன் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்து கேஷுவலாக எடுத்துக் கொடுத்தாராம்.
இது லேசான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Subscribe to get more videos :