சமுத்திரத்தின் பேரிரைச்சலை கூட சங்கீதமாக்குகிற சக்தி மெரீனாவுக்கு உண்டு. இங்கே நின்று கொண்டு அட்லீஸ்ட் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு ரைம்ஸ் மட்டுவது பாடியிருக்கலாம் பாண்டிராஜ். ஆனால் ஒலித்ததெல்லாம் ஒரே அபஸ்வரம். தனது ஸ்கிரிப்ட் பேப்பரை சுண்டல் மடிக்க கொடுத்துவிட்டு மனம் போன போக்கில் படம் எடுத்திருக்கிறார் பா.ராஜ். (ஸாரி பிரதர், ரொம்ப எதிர்பார்த்துட்டோம்)
நூல் பிடித்த மாதிரி கதை சொல்வதில் சமர்த்தரான பாண்டிராஜ், இந்த படத்தில் நு£லறுந்த பட்டம் போல இஷ்டத்திற்கு திரிந்திருப்பதுதான் முதல் அதிர்ச்சி.
இதுவும் பசங்களின் கதைதான். கிராமத்திலிருந்து சித்தப்பா தொந்தரவு பொறுக்க முடியாமல் சென்னைக்கு வரும் அனாதை சிறுவன் பக்கோடா, பீச்சில் சுண்டல் விற்று பிழைப்பதும், அவனுடன் அதே பீச்சில் திரியும் மற்றும் சிலரின் கதையும்தான் இந்த மெரீனா. சுகமாக சொல்வதற்கும், சுவையாக மெல்வதற்கும் ஆயிரம் கதைகள் உண்டு இங்கே. ஆனால்...?
எப்படியாவது படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற ஏராளமான சிறுவர்கள் அங்கே சுண்டல் விற்கிறார்கள் என்கிற ஒரு விஷயத்தைதான் ரொம்ப மெனக்கெட்டு சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர். பாத்திரங்களுக்கு ஏற்ற முகங்களை தேர்வு செய்வதில் கூட அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை என்பதற்கு மிக சரியான உதாரணம் அந்த பாட்டுக்காரர். அவரது கன்ன செழுமையில் முனியாண்டி விலாஸ் பிரியாணி அப்பட்டமாக தெரிகிறதே சாமி.
படத்தில் நல்ல விஷயமே இல்லையா? ஏன் இல்லை. இந்த காலத்து காதலும், காதலர்களும் எப்படியிருக்கிறார்கள் என்பதை புட்டு புட்டு வைக்கிறது சில காட்சிகள். காதல் என்ற பெயரில் சிவ கார்த்திகேயனின் பாக்கெட்டை கணிசமான அளவுக்கு பொத்தல் போட்டு விட்டு சைலண்டாக வேறொரு அப்பாவி புருஷனோடு அதே பீச்சுக்கு வரும் ஓவியா, எங்கம்மாவோட சின்ன வயசுல பீச்சுக்கு வந்துருக்கேன். அப்புறம் இப்பதான் பார்க்கிறேன் என்கிறாரே... மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...