விரைவில் ஒரு பெரிய வீட்டு கல்யாணம் நடைபெற இருக்கிறது. இந்த கல்யாணத்திற்கு இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணப் பெண்ணாக மாறப்போகிற சினேகாவை அழைத்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு மேட்டருன்னு சொல்ல வந்துட்டான் என்று எரிச்சல்படும் மிஸ்டர் பொதுஜனத்திற்கு ஒரு வேண்டுகோள். இது அந்த மேட்டர் மட்டுமில்லீங்... இன்னொன்னும் இருக்கு.
இந்த அழைப்பு, வாசலில் நின்று கொண்டு விவிபிஐகளை புன்னகையோடு வரவேற்க சொல்லி மட்டும்தானாம். இதற்காக பல லட்சங்களை கொட்டிக் கொடுத்திருக்கிறது அந்த பெரிய வீடு. ஏற்கனவே அந்த வீட்டுக்கும் கடைக்கும் ரொம்பவே நெருக்கமானவர் சினேகா. இதற்காக தனி பில் போட இவர் ஆசைப்படா விட்டாலும் 'எடுத்துக்கோ எடுத்துக்கோ' என்று கொடுத்தார்களாம் அவர்கள். அதுபோகட்டும்... சினேகாவுக்கு எப்போ கல்யாணம்? மே மாதத்தில் என்கிறார்கள். ஜோடிகளின் ஹனிமூன் கனடாவில்தானாம்.
மேலும் படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

