Monday, February 13, 2012

தோனி - திரை விமர்சனம்

படத்தோட பெயருக்கும் படத்துக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது ”தோனி-நாட் அவுட்” தான். நடிகராக,தயாரிப்பாளராக இருந்த பிரகாஷ்ராஜ் தமிழில் இயக்குனராக, இசை ’மேஸ்ட்ரோ இளையராஜா’ எனும்போது அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. முழுவதுமாக எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாவிட்டாலும் ஏமாற்றம் அடைய வைக்கவில்லை.

ஏற்கனவே திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நண்பன் திரைப்படத்தின் கருத்தை தான் இப்படமும் முன் வைக்கிறது. எஜுகேசன் சிஸ்டத்தை மாற்றனும், பிள்ளைகளை விருப்பபட்ட துறையை தேர்ந்தெடுக்கவிடனும்.

மிடில்கிளாஸ் குடும்பத்தில் மனைவியை இழந்து ஒரு பெண், ஒரு ஆண் இவ்விரண்டு குழந்தையை வளர்க்க கஸ்டப்படும் அப்பாவாக பிரகாஷ்ராஜ், தன் மகன் படித்து நல்ல நிலைக்கு வர பாடுபடுகிறார். ஆனால் மகனோ முழுக்கவனமும் கிரிக்கெட் மீது வைத்து இருக்கிறான். 

படிப்பே வராத மகனை எப்பாடுபட்டும் படிக்க வைக்க முயற்சி செய்வதில் மகன் கோமா நிலைக்கு ஆளாகிறான். அப்போது மாற்றம் வந்த பிரகாஷ் ராஜ் என்ன செய்கிறார் என்பது தான் மீத கதை.

சின்ன பிளேடு கீரியது போல் இருக்கும் காயத்தால் கோமா நிலைக்கு ஒருவன் ஆளாகிறான் எனும் போது சினிமா இது ஏற்றுக்கொள்ளுங்கள் மகாஜனங்களே என்று சொல்லவேண்டி இருக்கிறது. மேலும் படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

Subscribe to get more videos :