யானைகளின் தாகத்தை தீர்க்க வேண்டுமென்றால், குறைந்த பட்சம் ஒரு குளமாகவாவது இருக்க வேண்டும். ஆனால் ஒரு கடல் போல வந்திருக்கிறது
பிவிபி சினிமா நிறுவனம். இவர்களை அண்டி நிற்கும் யானைகளாக கமல், செல்வராகவன், பாலா ஆகியோர் இருக்கிறார்கள். முறையே விஸ்வரூபம், இரண்டாம் உலகம், எரிதணல் என்று படப்பிடிப்புகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

கை நிறைய லட்டு, கவலையில்லாம வெட்டு என்கிற மாதிரி பணத்தை அள்ளி இரைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு படத்திற்கும். முதல் படமான ராஜபாட்டையை விடுங்கள். இந்த நிறுவனத்தின் அடுத்தடுத்த தயாரிப்புகள் ஷியூர் ஹிட் ரகங்கள்தான் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்களும்.
இந்த நிலையில் மேலும் ஒரு படத்தை வெகு வேகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது பிவிபி. 'நான் ஈ' என்ற பெயரில் உருவாகி வரும் இப்படம் எதிர்வரும் ஏப்ரலில் திரைக்கு வரப்போகிறது. அப்படியென்ன விசேஷம் இந்த ஈ -ல்?
மஹதீரா என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய ராஜமௌலிதான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் த்ரில்லர்... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...