வச்சா இட்லி, வழிச்சா சட்னி என்கிற டைப் போலிருக்கிறது ஷகிலா. கடந்த பல வருடங்களாகவே தனது பிரமாண்ட நடிப்பை பல்வேறு மொழிகளிலும் காட்டித் தள்ளிய அவர், இப்போது தமிழ் படம் ஒன்றில் 'கனமான' சாமியார் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சாமியாரின் பெயர் பீரானந்தி. பீர் குடித்துவிட்டு குறி சொல்வாராம் இவர்.
ஷகிலாவை சாமியாராக காட்டினார்கள் என்றால் நாட்டிலிருக்கிற சாமியார்கள் மீதெல்லாம் இந்த டைரக்டருக்கு எவ்வளவு 'கோவாச்சு' இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
ஆசாமி என்ற பெயரில் தயாராகி வருகிறது இந்த படம். படத்தில் போலி சாமியாராக நடிக்கும் ஷகிலா, படப்பிடிப்புக்கு கிளம்பும்போதும் சரி, ஸ்பாட்டுக்கு வந்த பின்பும் சரி. பத்து நிமிடம் அமைதியாக சாமி கும்பிட்டுவிட்டுதான் கேமிரா முன்பே நிற்கிறார். கேரளாவிலிருந்து முற்றிலுமாக விரட்டப்பட்டிருக்கும் இவருக்கு அவ்வப்போது சோறு போட்டுக் கொண்டிருப்பது தமிழில் உருவாகும் சிறு முதலீட்டு படங்கள்தான். எனவே இந்த வாய்ப்புகளாவது நிரந்தரமாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது பிரார்த்தனையாம். தொடர்ந்து படிக்க
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...