ஆன்ட்டி ஹீரோ, கதாநாயகனின் நண்பன் என்று எந்த வேடமாக இருந்தாலும் ஏற்று நடிக்கும் சமர்த்து நடிகர் ப்ருத்விராஜ், இந்தப் புத்தாண்டு தனக்கு ரொம்ப விசேஷமானது என்கிறார். காரணம் இவரது முதல் இந்திப் படமான 'ஆய்யா' விரைவில் வெளியாக இருக்கிறது.
'ஆய்யா' என்றால் ஆச்சரியம் என்று அர்த்தமாம். அது கிடக்கட்டும். அதைவிட ஆச்சரியமான சமாச்சாரத்தை விவரிக்கும்போது
ப்ருத்வியின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.
ப்ருத்வியின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.
"இந்தப் படத்தில் எனக்கு ராணி முகர்ஜிதான் ஜோடி. ஒரு காலத்தில் அவர் என்னுடைய கனவுக்கன்னி. ஒருமுறையாவது அவரைச் சந்தித்துப் பேச முடியுமா என்று கூட ஏங்கி இருக்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது என் பிறந்த நாள் வந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் மும்பையில் தங்கியிருந்து பிஸியாக நடித்து வந்த எனக்கு, என் பிறந்தநாளே மறந்துபோனது. ஆனால் ராணி முகர்ஜி என் பிறந்த நாளை எப்படியோ தெரிந்து கொண்டு, ஷூட்டிங் நடந்த இடத்திற்கு பெரிய கேக்குடன் வந்துவிட்டார். யாருக்கோ வந்த கேக் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென என்னை நெருங்கி வந்து 'ஹேப்பி பர்த்டே டூ யூ' என்று ராணி பாட, பிறகு அங்கிருந்த எல்லோரும் கோரஸாக பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாடினாங்க. என் கனவுக்கன்னியே எனக்குக் கொடுத்த அந்தப் பிறந்த பரிசும், மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் -
