தமிழ்சினிமாவுக்காக தன்னையே தாரை வார்த்த கர்ணன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்த கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மறு வடிவமைத்திருக்கிறார் தயாரிப்பாளர் சாந்தி சொக்கலிங்கம். பிரசாத் லேப் நிர்வாகத்தின் இந்த அளப்பரிய முயற்சிக்கு மனதார ஒரு வணக்கம் போட்டோம். எத்தனையோ வருடங்களுக்கு முன் பார்த்த கர்ணனை புத்தம் புதிய பிரிண்ட்டாக பார்க்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டது நமக்கு.
அந்த நடை என்ன? சிங்கத்திற்கு நிகரான கர்ஜனையென்ன? இதழோரத்தில் வழியும் கம்பீர புன்னகை என்ன? அடேயப்பா... பிலிம் என்ற பெயரையே சிவாஜி என்று மாற்றினாலும் கூட பொருந்தும்.
நட்புக்கும் தாய்மைக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு அல்லாடும் சிவாஜியின் நடிப்பையும் வசனத்தையும் ஒருமுறையாவது கேட்காத தமிழனும் பார்க்காத தமிழனும் இனிமேலும் மெத்தனம் காட்ட வேண்டாம். இதோ இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது கர்ணன். அதுவும் தியேட்டர் ஸ்கிரீன் மழையில் நனைகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வரி வரிக்கோடுகள் இல்லை. சவுண்ட் பாக்சில் எலி புகுந்துவிட்டதோ என்கிற மாதிரி ஒலிப்பதிவு இல்லை. எல்லா தொழில் நுட்ப விஷயங்களும் அவ்வளவு துல்லியத்துடன். தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...