காட்டுராஜாவின் படமெடுக்க தன் வீட்டையே விற்றுவிட்டார் டைரக்டர் ஒருவர். குப்பி என்ற அற்புதமான படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷின் அடுத்த படைப்புதான் வனயுத்தம். சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையை உண்மைக்கு அருகில் நின்று படமெடுக்க ஆசைப் பட்டிருக்கிறார் ரமேஷ். அதற்கான களப்பலிதான் இந்த அழகான வீடு. மனைவியிடம், "இந்த வீட்டின் வாஸ்து சரியில்லை, வேறு வீடு வாங்கிக் கொள்ளலாம்' என்று கூறி விற்றதாக ரமேஷ் சொன்னபோது அந்த பிரஸ் மீட்டிலிருந்து வந்த ச்சொச்சொச்சோ சப்தம் மனதின் ஆழத்திலிருந்து வந்தவைதான்.
படத்தின் ஹீரோ அர்ஜுன். வீரப்பனை கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் ரெண்டு பாட்டு எடுத்தோம்னு சொல்ல முடியாது. எல்லா நாளும் ஜெயில், காடுன்னுதான் போச்சு என்றார். வீரப்பனை சுட்டுக் கொல்கிற காட்சியை எங்கு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்க வேண்டும் என்று சொல்லிட்டார் டைரக்டர். ரொம்ப சிரமப்பட்டுதான் எடுத்திருக்கோம் என்றார் அர்ஜுன். வீரப்பன் கதைதான் எல்லாருக்கும் தெரியுமே, இதில் புதுசா என்ன சொல்லப் போறோம் என்ற ஆக்ஷன் கிங்கின் சந்தேகம்தான் நமக்கும். அதற்கு பிரமாதமான ஒரு பதிலை சொன்னார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..