Friday, May 4, 2012

வழக்கு எண் 18/9 - விமர்சனம்


டீன் ஏஜ் மாணவர்கள் சிலரின் 'ட்ரைனேஜ்' புத்தி எவ்வளவு பெரிய கொடூரங்களை நிகழ்த்துகிறது? 'செல்'லும் செல்லமுமாக திரியும் பிள்ளைகளின் உலகம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது? ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்து இந்த சொசைட்டிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். இவரது 'செவுளில் அறையும்' படங்களின் வரிசையில் இந்த வழக்கும் கல்லில் வடித்த எப்.ஐ.ஆர் ஆகியிருக்கிறது. வருஷத்துக்கு ஒரு பட கணக்கோடு வாழும் இயக்குனர்கள் மத்தியில் வாழ்க்கைக்கு ஒரு பாடம் என்ற கணக்கோடு உலா வரும் பாலாஜி சக்திவேல், தமிழ்சினிமாவின் 'திட'சக்திவேல் என்பதில் துளி கூட மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அன்றாட கூலிகளின் திண்டாட்ட வாழ்க்கை ஒருபுறம். மிதமிஞ்சிய கொழுப்போடு திரியும் மேல்தட்டு வாழ்க்கை மறுபுறம். இந்த யானைகள் மிதித்து எலிக்குஞ்சுகள் சாவதைதான் வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறது படம்.

ஒரு பெண்ணின் முகத்தில் யாரோ ஆசிட் அடித்துவிட, அவளை அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருக்கிறார்கள். ஊற்றியது யாராக இருக்கும் என்ற சந்தேகத்தில் விசாரணையை ஆரம்பிக்கிறது போலீஸ். பிளாட்பார கடையில் வேலை செய்யும் வேலுவை சந்தேகப்படும் அவர்கள் விசாரணையை துவங்க, ஒருவனின் தலையெழுத்தில் இத்தனை கிறுக்கலா என்று அதிர வைக்கிறது அவனது வாழ்க்கை. அடப்பாவமே என்று அசந்து போகும் போலீசே, சரி போ என்று அனுப்பி வைப்பதும் பின்பு வேறு வழியில்லாமல் அவனை பலிகடா ஆக்குவதும் ஒரு பகுதி.

'நீங்க விசாரிக்க வேண்டியது இன்னொருத்தனையும்தான்' என்று தயங்கி தயங்கி போலீசிடம் சொல்கிற டீன் ஏஜ் மாணவி ஒருத்தியின் பார்வையில் தொடர்கிறது இன்னொரு பகுதி. இரண்டுக்கும் போடப்படுகிற முடிச்சும் அதன் கொடூரமும்தான் க்ளைமாக்ஸ். இவ்விரண்டையும் அழகான பின்னலாக தந்திருக்கும் கோபி கிருஷ்ணாவின் மிக நேர்த்தியான எடிட்டிங் இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீயோ, ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளா மகந்தாவோ, அல்லது படத்தில் நிமிஷங்களில் வந்து போகிற மற்ற கேரக்டர்களோ.... அத்தனை பேரும் ஏதோ பிறந்ததிலிருந்தே நடிப்பை தொழிலாக கொண்வர்கள் போல பிரமாதப்படுத்துகிறார்கள். அதுவும் ஜோதி? ஒரு வேலைக்காரியின் அழகில்லாத 'நடை'யில் துவங்கியிருக்கிறது அவரது நடிப்பு. இப்படத்தில் இவர் பேசியிருக்கும் வசனங்களை ஒரு சிலேட்டில் எழுதிவிடலாம். ஆனால் பக்கம் பக்கமாக பேசுகிறது அவரது கண்கள்.

துளி அலட்டல் இல்லை இன்ஸ்பெக்டர் குமாரவேலுவிடம். என்னமாய் நடித்திருக்கிறார்? அவ்வளவு பசங்களையும் அள்ளிக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு 'தாயோளிகளா...' என்று அவர் திட்டுகிற போது நம்மையறியாமல் விசில் பறக்கிறது. ஆனால் தமிழ்சினிமா வழக்கப்படி இவரும் கெட்ட போலீசாகிவிடுகிறார்.... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :