இளவரசியின் கல்யாணம் புன்னகை சூழ முடிந்துவிட்டது. பல்லக்கில் ஏற்றி வந்து பரவசப்படுத்திவிட்டார்கள் அவரை. சினேகாவின் சிரிப்பு வெளிச்சத்தின் முன் அங்கிருந்த ஆர்ட்டிபிஷியல் விளக்குகள் எல்லாம் வெட்கப்பட்டு கண்ணை மூடிக் கொள்கிற அளவுக்கு சந்தோஷமோ சந்தோஷம்!
இரு வீட்டார் சம்மதத்தோடு பாரம்பரிய முறையில் நடந்த இந்த திருமணத்திற்கு உலகம் முழுக்க இருக்கிற சினேகா-பிரசன்னா ரசிகர்கள் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளூரில் இருக்கும் ஹீரோக்கள் மனசு என்ன நினைத்ததோ, சொல்லிக் கொள்ளும்படி ஒருவர் கூட இந்த திருமணத்திற்கு வரவில்லை என்பதுதான் பலத்த சோகம். (அவருக்கல்ல, நமக்கு)
ஷாம் தொடங்கி கமல் வரைக்கும் அநேகமாக எல்லா ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார் சினேகா. ஆனால் சொல்லி வைத்த மாதிரி இவர்கள் யாருமே திருமணத்திற்கு நேரில் வரவில்லை. ஆட்டோகிராப் படத்தில் முக்கியமான ரோலில் சினேகாவை நடிக்க வைத்த ஹீரோ சேரன் மட்டும் இந்த 'வராதவர்கள்' லிஸ்ட்டிலிருந்து விடுபட்டிருந்தார்.... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...