Monday, May 14, 2012

கலகலப்பு - திரைவிமர்சனம்


கட்டெறும்பு தலையில் கற்கண்டு விழுந்த மாதிரி ஒரு வித இன்ப அவஸ்தைதான் இந்த கலகலப்பு. சுந்தர்சி யின் 25 -வது படமாம். மற்ற 24 ஐ போலவே இந்த படத்திலும் நம்மை குத்த வச்சு குலுக்குகிறார் சு.சி. தமிழ்சினிமாவின் முடிசூடா 'வின்னர்' சந்தானத்தையும், 'ரன்னர்' சிவாவையும் நம்பிய ரசிகர்களுக்கு வாய் கொள்ளாத  வலி உத்தரவாதம். அப்படியே அஞ்சலி, ஓவியாவின் திவ்ய தரிசனம் மனசுக்குள் பாய்ந்த மஞ்சளாறு!

தனது முன்னோர்கள் நடத்திய மசாலா கபே, மார்ச்சுவரி ரேஞ்சுக்கு டல்லாகிவிட, அதை மறுபடியும் து£க்கி நிறுத்தி குடும்ப பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்பதே ஹீரோ விமலின் லட்சியம். இவரது சகோதரர்தான் மிர்ச்சி சிவா. அண்ணாருக்கு தொழில் ஆங்காங்கே ஆட்டைய போடுவது. அப்படியே கண்டிஷன் ஃபைலில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்தும் போடுவது. மிச்ச நேரத்தில் கடைக்குள்ளேயே வளைய வரும் ஓவியாவை காதலிக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாக வரும் ஹெல்த் இன்ஸ்பெக்டர்தான் அஞ்சலி, மசாலா கபேயை குறி வைத்து இவர் எடுக்கும் நடவடிக்கைகளில் பஞ்சராகும் விமல், பின்பு அதே அஞ்சலியை காதலிக்கிறார். சுந்தர்சி படங்களுக்கே நேர்ந்து விடப்பட்ட முறைமாமன் சென்ட்டிமென்ட் இங்கேயும் கிராஸ் ஆக, அஞ்சலி விமல் லவ் நிறைவேறியதா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் மொத்த கதையான இந்த ஒரு கரண்டி சுண்டலை மடிக்க, இளவரசு, சுப்பு, மனோபாலா, கடன், வைரம், கடத்தல், தேர்தல் என்று எக்கச்சக்க பொட்டலங்களை சுற்றியிருக்கிறார் சுந்தர்சி. ஆனால் அத்தனையும் இம்மியளவும் குறைக்க தேவையில்லாத 'இடிமின்னல்' சமாச்சாரங்கள்!

முந்தைய படங்களில் தனிக்காட்டு ராஜாவாக உலா வந்த விமல், சந்தானமும் சிவாவும் சேர்ந்து இருபுறமும் நசுக்கிய கூஜாவாகிவிடுவதுதான் பரிதாபம். இருந்தாலும் இவருக்குதான் அஞ்சலி என்பதால் இவரையே ஹீரோவாக கொள்வோம். கிடைத்த ஒன்றிரண்டு சந்தர்பங்களில் 'நான் விமலாக்கும்' என்று நிரூபிக்கவும் செய்கிறார்.

லிஸ்ட் வைத்துக் கொண்டு காதலிக்காக திருடும் சிவா, தம்பியை மிரட்டும் இளவரசுவை தெரு தெருவாக திரிய வைப்பதும், முணுக்கென்றால் ஒரு சிரிப்பு வெடியை கொளுத்திப் போடுவதுமாக மொத்த தியேட்டரையும் 'சிவா'ய நமஹாவாக்குகிறார். இவரது அலட்டிக் கொள்ளாத டயலாக் டெலிவரிக்கு மொத்த தியேட்டரும் சரண்டர்.

விரலெல்லாம் கையாகி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் சந்தானம். ஒரு ஆக்ஷன் ஹீரோ லெவலுக்கு என்ட்ரி ஆவதென்ன, கடைசியில் ரீயாக்ஷன் செய்யக் கூட முடியாதளவுக்கு அஞ்சலியை பறிகொடுப்பதென்ன... சந்தானத்தின் சகல சென்ட்டிமீட்டரும் நமது விலாவை பதம் பார்க்கிறது. ஏண்டா. சின்னம்மாவை இப்படிதான் து£க்குவியா? என்ற அவரது கேள்வியும்... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....


Subscribe to get more videos :