ஒரு சாக்பீஸ் மாதிரி தன்னையே கரைத்துக் கொண்டு மாணவர்களை வளர்த்தெடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. ஆலயங்கள்....! இதைதான் சொல்ல வருகிறது சாட்டை.
கமர்ஷியல் பூதங்களின் 'கரகரப்பு' சப்தங்களுக்கு நடுவில் வந்திருக்கும் அருமையான தாலாட்டுதான் இந்த சாட்டை. இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கே தனிச் துணிச்சல் வேண்டும். அதையும் பெரும் பணத்தை கொட்டி சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பிரபுசாலமன். தேங்க் யூ ஜீசஸ்.
வந்தாரங்குடி கவர்மென்ட் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் பிசிக்ஸ் ஆசிரியர் சமுத்திரக்கனி. படிச்சா படி, படிக்காட்டி போ... என்கிற அலட்சியத்தோடு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களும், வட்டிப் பணம் தராதவர்கள் லிஸ்ட்டை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்திருக்கும் ஏ.ஹெச்சமுமாக, மிக சுவாரஸ்யமான விலங்குகள் திரியும் திடலாக இருக்கிறது அந்த ஸ்கூல். மாணவர்களின் மீது நிஜமான அக்கறையுள்ள சமுத்திரக்கனியை அங்கிருந்து விரட்டியடிக்க நினைக்கும் அத்தனை பேரையும் மண்ணை கவ்வ வைத்து எல்லார் மனசிலும் இடம் பிடிக்கிறார் கனி.
முதலில் வில்லன்களை ஜெயிக்க வைத்து இறுதியாக ஹீரோவுக்கு மெடல் தருவதுதானே சுவாரஸ்யமான திரைக்கதைக்கு அழகு? அதையும் கோடு மாறாமல் செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் அன்பழகன். ஆனால் எவ்வித அலுப்பும் நமக்கு ஏற்படாமல்.
சமுத்திரக்கனியை விட்டால் இந்த கேரக்டரை நேர்மையாக சுமக்க வேறு யாரால் முடியும்? அவ்வளவு அழகாக, கம்பீரமாக, தயாளன் வாத்தியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் கனி. ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் ஒரு க- வை எழுதி அதையே ஒரு விளையாட்டாக்குகிற யுக்தியில் ஆரம்பிக்கிறது அவரது கற்பித்தல் சுவாரஸ்யம். (இந்த ஏரியாவில் சற்று ஆழமாக யோசித்திருக்கிறார் இயக்குனர், வெல்டன்) மாணவர்களை பேசிப் பேசியே தன் வழிக்கு கொண்டு வருகிற கனியின் சாமர்த்தியத்தை எல்லா வாத்தியார்களும் கற்றுக் கொண்டால் பிரம்புக்கு வேலையேது?
மறைமுகமாக அல்ல, நேரடியான வில்லனாகவே ஆகிவிட்டார் தம்பி ராமய்யா. அந்த பள்ளியை தன் கைக்குள் வைத்திருக்கும் அவரது ஆணவத்திற்கு முதல் சம்மட்டியாக வந்து சேரும் சமுத்திரக்கனியை அவர் பழி வாங்குகிற காட்சிகளும், நேரடியாக உதாசினப்படுத்தும் காட்சிகளும் அதிர வைக்கிறது. ஒரு காட்சியில் இரண்டு கைகளையும் சமுத்திரக்கனிக்காக தட்டும் தம்பியின் ஸ்டைல், அடேயப்பா... எவ்வளவு கொடூரம்.
மாவட்டத்திலேயே முதல் இடத்திற்கு அந்த பள்ளியை கொண்டு வரும் சமுத்திரக்கனி நடுவில் படுகிற துன்பங்கள் இவ்வளவு பாலிடிக்ஸ் இருக்கிறதா ஆசிரியர்-மாணவி குருபக்திக்கிடையில் என்று பதற வைக்கிறது.
ப்ளஸ் டூ பசங்களின் காதல் எந்தளவுக்கு மெச்சூரிடியாக இருக்கும் என்பதை மகிமா-யுவன் காதலை கொண்டு அளவிட்டிருக்கிறார் அன்பழகன். 'ஏன் என்னை திரும்பி பார்த்தே?' என்று கேட்கும் யுவனுக்கு, மகிமா சொல்லும் பதில் கூட... தொடர்ந்து விமர்சனத்தை படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...