'கை மாறிய பதினாலு எல்' என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த செய்தியை தொடர்ந்து நம்மை தொடர்பு கொண்டார் 'கள்ள துப்பாக்கி' படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன். அந்த செய்தியில சில திருத்தங்கள் இருக்கு... என்றபடி பேச ஆரம்பித்தவர், இந்த வழக்கை ஏன் வாபஸ் வாங்கினார் என்பது குறித்து டாப் அண்டு பாட்டமாக விவரித்தார். அத்தனையையும் எழுதினால் 'தாண்டவம்' படத்தை இரண்டு முறை பார்த்த ஃபீலிங் வரும் என்பதால் சுருக்கமாக இங்கே.
இந்த படத்தை சுமார் இரண்டே முக்கால் கோடி செலவில் எடுத்து முடிச்சுட்டோம். முதலில் நாங்கதான் இந்த தலைப்பை பதிவு செஞ்சோம். அப்புறம்தான் அவங்க பதிவு செஞ்சாங்க. அதுக்கு எங்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கு. அதெல்லாம் பழைய மேட்டர். இப்போ நடந்தது என்னன்னா திடீர்னு ஒருநாள் முருகதாஸ் என்னை நேர்ல வந்து சந்திச்சார். நான் மதிக்கக்கூடிய டைரக்டர் அவர். அவரே நேர்ல வந்து என்னை சந்திச்சு நிறைய விஷயங்களை பகிர்ந்துகிட்டார். இந்த தலைப்பை மாத்திட்டு வேற வச்சுக்கலாம் என்று விஜய் முருகதாசுக்கு அனுப்பிய எஸ்எம்சையும் காமிச்சார்.
இந்த தலைப்புதான் என் படத்துக்கு... தொடர்ந்து செய்தியை படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... http://bit.ly/QiTUFJ