கொஞ்ச நாட்களாக 'கலக' நாயகனாக சித்தரிக்கப்பட்ட உலக நாயகன் கமல் அவ்வுலகம் து£ற்றியதை போலதான் இந்த படத்தை எடுத்திருக்கிறாரா? இதை உடனடியாக தெரிந்து கொள்ளத் துடித்த விமர்சகர்கள் அனைவரும் வெளி மாநிலங்களுக்கு பஸ்சிலோ ரயிலிலோ தொங்கிக் கொண்டு போயாவது இந்த கறந்த பாலை ருசித்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாழ்த்திய நமக்கு கிடைத்ததோ வெண்ணை நீக்கப்பட்டு கொஞ்சம் நீரையும் மிக்ஸ் பண்ணிய மில்க்! அதனால் கமல் எடுத்த ரிஸ்க், சற்றே வீரியம் குறைந்த 'ரஸ்க்' ஆகியிருக்கிறது!
நளினமான நாட்டிய சிகாமணியாக அறிமுகமாகிறார் கமல், அதன்பிறகு அவர் என்னவாக வரப் போகிறார் என்பதை மூளையின் 'பிலிமோ' நரம்புகள் நமக்கு சொல்லிக் கொண்டே இருந்தாலும், அந்த அழகிய தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பிக்கிறோம் நாம். தீவிரவாதிகள் கூடாரத்தில் சிக்கிய கமல், மனைவி பூஜா குமாரின் முன்னால் அவர்களிடம் அடிவாங்கி துடிக்கிறார். சரிந்து விழும் அவரை பரிதாபத்தோடு நோக்கும் அதே பூஜா, அதற்கப்புறம் 'அவரா நீ...' என்பது போல ஒரு பார்வை பார்க்கிறாரே, அதற்கு சற்று முன்னால் நடக்கும் அந்த சண்டைக் காட்சிதான் கமல் ரசிகர் மன்றத்தின் வேர்களில் ஊற்றப்பட்ட ஐஸ்வாட்டர். மின்னலென எதிரிகளை வீழ்த்தும் கமல், பின்பு நிதானமாக அதே காட்சியை ஓடவிடும்போது கமல் என்ற டைரக்டர் பளிச்சென்று நிமிர்கிறார். அதுவும் ஆக்ஷன் கமலை விடவும் அதிக வேகத்தில்.
படத்தில் ஒரு முஸ்லீமாக பிறக்கும் கமல், இந்துவாக வாழ்ந்து, அமெரிக்காவின் நியூயார்க்கை அவ்வளவு நரம்படியாக காப்பாற்ற போராடுவது ஏன்? தீவிரவாதத்தை ஒடுக்கவா? அல்லது தனது படை வீர பராக்கிரமத்தை காட்டவா? போன்ற கேள்விகளை எழுப்பினால் இப்படி ஒரு கதைக்களத்தையும், ஆப்கன் தீவிரவாதிகளின் அட்டகாசத்தையும் அறியாமலே போயிருக்கக் கூடும். அதே நேரத்தில் 'அமெரிக்காவின் கைக்கூலியாகிவிட்டாரா கமல்?' என்ற கவர் ஸ்டோரிகளையும் கண்டன பேச்சுகளையும் எதிர்கொள்ள தயாராகிதான் இப்படி ஒரு படத்தையும் எடுத்திருக்கிறார் அவர்.
நாட்டிய நளின மணியான அவரை போட்டோவில் பார்த்த மாத்திரத்தில் அதிரும் தீவிரவாதி உமர், அவரை நேரடியாக ஸ்பாட்டுக்குக்கு வந்து காண்பதற்குள் கமலின் அதிரடி ஆட்டங்கள் முடிந்து 'உளவுத் துறை' பிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. நாம் நினைப்பது போல கமல் வெறும் எய்ட் ப்ளஸ் ஒன் அல்ல. அவர் ஒரு மிடுக்கான அதிகாரி. அதுமட்டுமல்ல, எதிரிகளின் கூடாரத்தில் காஷ்மீர் தீவிரவாதியாக நுழைந்தவர். ஆப்கன் தீவிரவாதிகளுக்கே ஆயுத பயிற்சி அளித்தவர் என்றெல்லாம் தெரிய வர, நம்மையறியாமல் சீட்டின் நுனிக்கு தள்ளுகிறது திருப்பங்கள்.
அழகுக்காக வளர்க்கப்படுகிற புறாக்களுக்கு பின்பும் ஒரு அர்த்தமிருப்பதாக காட்டுகிற கமலின் டெக்னிக், அசரடிக்கும் நுணுக்கம். அத்துடன் தலிபான்களின் பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், ஆங்கிலம் கற்பதே தவறு என நினைக்கிற அறிவீனம். சந்தேகம் வந்தால் நடுரோட்டில் நிற்க வைத்து து£க்கிலிடுகிற வேகம். இப்படி அந்த வறண்ட பூமியின் இருண்ட பக்கங்களையும் ஒன்று விடாமல் பட்டியலிடுகிறார் கமல். துணிச்சல்! (அதுக்குதான் வாங்கிக் கட்டிக்கிட்டாரே)....
மேலும் விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/125bCzS