Monday, August 26, 2013

எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் தேட விரும்பவில்லை- விஷால்...

எம்ஜிஆர் என்ற பெரிய மனிதரின் பெயரை என் படத்தின் தலைப்பில் பயன்படுத்தி விளம்பரம் தேட விரும்பவில்லை. எனவே மதகஜராஜா தலைப்பிலிருந்து எம்ஜிஆர் என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டேன், என்றார் விஷால். சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் விஷால். இதில் அஞ்சலி மற்றும் வரலட்சுமி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.


தாமதம்

ஜெமினி நிறுவனம் தயாரித்த இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தது. ஆனால் நிதிச் சிக்கல்கள் காரணமாக படம் வெளியாவது தாமதமானது. இடையில் விஷால் நடித்த சமர் மற்றும் பட்டத்து யானை ஆகிய இரு படங்கள் வெளியாகிவிட்டன.

விஷாலே வாங்கினார் 

இப்போது படத்தை விஷாலே வாங்கிக் கொண்டார். தன் சொந்தப் பட நிறுவனமான விஷால் பிலிம் சர்க்யூட் மூலம் இந்தப் படத்தை அவர் வெளியிடுகிறார்.


செய்தியாளர் சந்திப்பு

இந்தப் படத்தின் வெளியீடு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், "நான் நடித்த எல்லா படங்களுமே குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வந்துள்ளன. இந்த படம் தாமதமாகி விட்டது. அதனால் விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி நானே வெளியிடுகிறேன்.

எம்ஜிஆர் 

இந்த படத்துக்கு முதலில், ‘மதகஜராஜா' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின்னர், ‘எம்.ஜி.ஆர்.' என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர், ஒரு மாபெரும் சக்தி. அதை தவறாக பயன்படுத்தி விளம்பரம் தேட விரும்பவில்லை. அதனால் படத்தின் பெயர் மீண்டும் ‘மதகஜராஜா' என்றே மாற்றப்பட்டுவிட்டது," என்றார். செப்டம்பரில் வெளியாகிறது மதகஜராஜா.

Subscribe to get more videos :