Thursday, January 8, 2015

ஐ ரிலீசாவதில் எந்த மாற்றமும் இல்லை


ஐ' திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாகும் என தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தாததால், 'ஐ' படத்தை மூன்று வாரங்களுக்கு வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து படம் பொங்கல் சமயத்தில் வெளியாகாது என செய்திகள் பரவின.

இது குறித்து 'ஐ' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசிய போது, "நாங்கள் நண்பர்களே. எங்களுக்குள்ளான இந்தப் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும். எனவே 'ஐ' சொன்ன தேதியில் வெளியாகும்" என்று கூறினார்.

Subscribe to get more videos :