பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் இவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்வார் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிடியை.பைத்தியம் என்று திட்டி இருந்தார்.
”இந்த மாதிரி பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது” என கூறி இருந்தார். இதற்கு முன் பிரதமர் மோடியை அவமரியாதையாகப் பேசி மிரட்டி வீடியோவில் பேசி அது பேஸ்புக்கில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் குவான்டீல் பலூச் தனது அதிகார பூர்வ பேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்
20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது இதில் இந்தியாவை தோற்கடித்தால் முழு தேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.மேலும் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்து உள்ளார். அவர் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என கூறி உள்ளார்