Thursday, March 17, 2016

தற்கொலை செய்வதை வீடியோவின் படம்பிடித்த நடிகை


சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி மற்றும் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். 

23 வயதான கே. நிரோஷா செகண்ட்ராபாத்தைச் சேர்ந்தவர்.

பிரபல தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும், அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு , இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சாய்பிரசாந்த் இறந்து மூன்று தினங்கள் கூட முடிவடையாத நிலையில் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரத்தின் தற்கொலை சினிமா, மற்றும் சின்னத்திரை உலகைச் சேர்ந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Subscribe to get more videos :