இந்தி அகிரா படத்துக்குப் பிறகு முருகதாஸ் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை கேட்டுள்ளனர். இசை படத்துக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா பிற இயக்குனர்களின் படங்களில் சின்ன வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் இறைவி படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். எனினும் முருகதாஸ் படத்தில் நடிக்க அவர் இன்னும் தனது சம்மதத்தை கூறவில்லை. தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து குஷி 2 படத்தை இயக்கும் வேலையில் அவர் தீவிரமாக உள்ளதால் முருகதாஸ் படத்தில் நடிக்க யோசிப்பதாக கூறப்படுகிறது.

