பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்து விட்டார் பிரபாஸ். இதில் குறிப்பாக தமிழகத்தில் இவருக்கு கூடிய விரைவில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை.
இந்நிலையில் இவரின் தம்பி பிரபோத் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ 43 லட்சத்திற்கு செக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டதாம்.
இதை தொடர்ந்து அந்த தொழிலதிபர் போலிஸில் புகார் கொடுக்க, ஓராண்டு சிறை, ரூ 80 லட்சம் பணத்தையும் திருப்பி அளிக்குமாறு பிரபாஸின் தம்பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.