Sunday, April 3, 2016

இறுதிக்கட்ட தருவாயில் பாபி சிம்ஹாவின் 'வல்லவனுக்கும் வல்லவன்'


'ஜிகர்தண்டா' படத்தில் வரும் 'அசால்ட் சேது' என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பாபி சிம்ஹா. தற்போது அவர் தயாரிப்பில் அசால்ட் PRODUCTIONS என்ற நிறுவனத்தின்  சார்பில் அவர் கதாநாயகனாக நடித்து வெளி வர  இருக்கும் படம் வல்லவனுக்கும்  வல்லவன்.அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கியுள்ள இந்த அதிரடி திரில்லர் படத்தின் டப்பிங் இன்று துவங்கியுள்ளது. இதைத் தவிர்த்து, 'கோ 2' மற்றும் 'இறைவி' ஆகிய இரண்டு படங்கள் பாபி சிம்ஹா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களிலும், பாபியின் கதாப்பாத்திரம் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடை விடாத படப்பிடிப்பின் மூலம் வல்லவனுக்கு வல்லவன் படத்தின்  படப்பிடிப்பு பணிகள் முடிந்து, டப்பிங் வேலைகள் இன்று துவங்கி உள்ளது. 

Subscribe to get more videos :