Thursday, March 26, 2009

இது தாங்க எங்க டீம்...


இந்த போட்டோல 7 பேர் தான் இருக்கோம் நாங்க குயீன்ஸ் லாண்ட்
போனோம்னு மீதி 4 பேருக்கு தெரிஞ்சா நாங்க அவ்வ்வ்வ்வ்வ் தான். சொல்லிடாதீங்க...

INDIA Team அப்படி சொன்னா எப்படி சந்தோஷமா இருக்கு ஏன்?, அவங்க தொடர்ந்து ஜெயிச்சிக்கிட்டு வர்றாங்க. அப்படித்தான் எங்களுக்கும் Starguysன்னு சொன்னா எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம், நாங்க எப்பவும் ஜெயிக்கிறதை விட தோக்குறது தான் ஜாஸ்தி ஆனாலும் நாங்க விடாம ஒன்னா செயல்படுவோம். அடுத்ததாக எங்களப்பத்தி சொல்லேறன்.

1. நிசார் அகமது இவன் தான் எங்களது அணியின் கேப்டன், அணிக்காக என்னவென்னாலும் பண்ணுவான்!, அதே சமயத்தில் ரொம்ப கோவக்காரன், இவன் எப்போ எப்படி ஆடுவான்னு தெரியாது. ஆனால் இவன் டீமை வழி நடத்தி செல்வதில் கங்குலிக்கு சிஷ்யன்! ஏன் கங்குலிக்கு சிஷ்யன்னு சொன்னேன் யோசிக்கிறீங்களா, இவன் ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு எல்லாம் தப்பாத்தான் போகும் அதான் சொன்னேன். இவன் தான் எனது ஆருயிர் நண்பன், இவன் எனக்கு கிடைச்சத நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன். ஐ லவ் யூ நிசார்.

2. முகமது நசுருதீன், இவன் டீமுக்காக ஆடுவான் ஆனால் அதே சமயத்தில் அவன் எவ்வளவு அடிச்சேன் எழுதி வச்சிப்பான். இவனும் ரொம்ப கோவக்காரன். டீம்ல் ஒருத்தன் சரியா ஆடலைன்னா திட்டிடுவான். அதனாலயே எங்களுக்குள்ளேயே சண்ட வரும். அதனால அவனுங்க கோவிச்சிட்டு போயிடுவாங்க, ஆனா பாசக்காரப் பையலுக மறுபடியும் வந்து டீம்க்காக ஆடுவாங்க. எங்க டீம்ல அதிகமா வெளிடீம்கிட்ட சண்ட போடுவதே இவன் தான். நாங்க விண் பண்ணிட்டோம்னா அதிக சந்தோஷப்படுகிறவனும் இவன்தான்.

3. ஸ்ரீ, நான் தாங்க நிசார், என்ன பத்தி சொல்லுடான்னு ஒரு வாரமா உயிர எடுத்து இன்னைக்கு வீட்டுக்கு வந்து கம்யூட்டர கையில கொடுத்து தோன்றத டைப் பண்ண சொல்றான். இவன் உங்க கிட்ட அவன பத்தி பெருமையா சொல்லியிருந்தா அத தயவு செய்து ரப்பர் வச்சி மனசுல இருந்து அழிச்சிடுங்க. இவன் எப்பவும் இப்படிதான். இவன பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல. நல்ல பையன் அவ்வளவு தான்.

4. கார்த்திக், இவன் அதிகமாக ஆடமாட்டான் ஆனால் டெஸ்ட் மேட்ச்ன்னு வாந்தா ஆடுவதே இவன் தான் சாரி ஆடாமல் அருப்பவனும் இவனே. ரும்ப நல்லவன் ஆனா ரும்ப கடுப்பேத்துவான்.

5.அருண் அருண் தான் எங்க டீம்ல நல்லா ஆட்ற பையன்னு அவனே சொல்லிப்பான். ஆடுவாங்க, நிஜமாதான். அட நம்புங்க. சரி உங்க இஷ்டம். இப்ப அடிக்கடி சைக்கிள் எடுத்துட்டு தெரு தெருவா சுத்துறான். எங்கடா போர சைக்கிள் எடுத்துட்டுன்னு கேட்டா, _________(எதுக்கு இந்து டேஷ்ன்னு யோசிக்கிறீங்களா, அது ஒன்னும் இல்ல கெட்ட வார்த்தை அதான் சென்சார் கட்) வேலைய பாருன்னு டீசண்டா சொல்லிட்டு போயிட்றான். மரியாதை தெரிஞ்ச பயபுல. இருக்கட்டும் இவன தனியா கவனிச்சிக்கிறேன்.

Subscribe to get more videos :