Thursday, June 2, 2011

திவ்யா ஒரு சகாப்தம்னு நினைச்சேன் ஆனா...!!!

எங்க டீமுல நல்ல இருந்த பசங்க இப்ப காதல்ல விழுந்து பலத்த அடிவாங்கி அடங்கி இருக்காங்க.

முதல்ல நம்ம நிசார் பத்தி சொல்றேன். பையன் பாக்க அழகா இருப்பான். ரூட் போட்ட எப்படி பட்ட பிகரையும் மடக்கும் திறமை இருக்கு அவனுக்கு. ஆனா பையபுல அத விட்டுட்டு . எங்க எதிரி டீமுல இருக்குற ஒரு நாதாரியோட தங்கச்சிய (Divya) லவ் பண்ணான். அதுவும் எல்லா பசங்க பண்ற மாதிரி இல்லைங்க, இவன் லவ்ல அவ்வளவு தூய்மை, நேர்மை, இருந்திச்சு, இவன் கிடைக்க அந்த பொண்ணு குடுத்துவைச்சிருக்கனும்னு நாங்க சந்தோஷமா இருந்தோம். அவன் லவ் பண்றதுக்கு முன்னாடி கூட என்கிட்ட கேட்டான். மச்சான் நீங்க என் கூட இருப்பீங்கலடான்னு. நாங்களும் இருப்போம்னு சொன்னேன்.

நல்ல போயிட்டு இருந்த அவன் லவ்ல ஒரு நாள் எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சுது. அத அவன்கிட்ட சொன்னேன். அவன் சொன்னான் அதெல்லாம் இல்ல மச்சி. அவங்க அம்மா இருக்காங்க அதான் அவ என்கிட்ட பேசமாட்றான்னு, நானும் சரின்னு விட்டுட்டேன். அப்புறம் ஒரு நாள் அவ நம்பர்ல இருந்து நிசார் மொபைலுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திச்சு. அத நான் தான் படிச்சேன். அதுல இருந்தத பாத்து எனக்கு சந்தேகம் இன்னும் அதிகம் ஆயிடிச்சி. அதுல இருந்தது என்ன தெரியுமா. dear please recharge me. நான் அவன் கிட்ட சொன்னேன் மச்சான் என்னடா இது பேச டைம் இல்லைன்னு சொல்ற அப்ப ஏண்டா திவ்யா ரீசார்ஜ் பண்ண சொல்றானு. பரதேசி அப்பவும் அவளுக்குத்தான் சப்போர்ட் பன்னான். என் கிட்ட பேச தாண்டா அவ ரீசார்ஜ் பண்ண சொல்றான்னு.

ஆனா அவகிட்ட இருந்து இவனுக்கு போன் வராது. இவனும் அடிக்கடி Recharge பண்ணி விடுவான்.

அப்ப தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்திச்சு. இவங்க லவ்ல புதுசா 2 பேர் வந்தாங்க, சங்கீதா, ரஞ்சித்னு. ஒரு நாள் நிசார் எதேர்ச்சியா போகும் போது,. ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில் திவ்யா ரஞ்சித் நின்னு பேசிட்டு இருந்தாங்க. இவன் அப்பவே அவங்க கிட்ட போய் பேசி இருந்தா அப்பவே அதுங்க மாட்டி இருக்கும். இவன் பேசாம வந்துட்டான். என் கிட்ட வந்து சொல்லி புலம்பினான். நானும் எவ்வளவோ முயற்சி செய்து பாத்தேன். என்னால அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும போது பாக்க முடியல. திவ்யா கிட்ட கேட்டதுக்கு சங்கீதா ரஞ்சித் லவ் பண்றாங்க அதான் சும்மா பேசிட்டு இருந்தோம்னு சொல்லிட்டு போயிட்டா.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி. இந்த பிரச்சினை ஆரம்பிச்சிது.. என்ன பிரச்சனை தெரியுமா அது. திவ்யா அண்ணனுக்கு இவங்க லவ் பண்றது தெரிஞ்சி போச்சி, ஆனா அவன் கண்டுக்காத மாதிரி இருந்தான். எப்பவும் போல எங்க கிட்ட ஜாலியா பேசுவான், பைக் வேணும்னா நிசார் கிட்ட கேட்பான். அவனும் மச்சான் கேட்குறானேனு எங்க கிட்ட வாங்கி தருவான். ஒரு நாள் திடீர்னு திவ்யா அண்ணன் நிசாரை நாங்க விளையாட்ற மைதானதுக்கு வர சொன்னான் அப்ப மணி 6க்கு மேல இருக்கும். இவனும் அலர்ட் ஆகி எங்க கிட்ட சொல்லிட்டு போனான். நாங்களும் தயாராக தான் இருந்தோம், இன்னைக்கு என்ன நடந்தாலும் ஒரு கை பாத்திரலாம்னு, ஆனா அங்க நிசாரை அடிக்க அவங்க டீம் இருந்தாங்க நாங்களும் போனோம். பேசிட்டு இருக்கும் போது திவ்யா அண்ணன் அவன் பெயர் (விவேக்) ஏண்டா என் தங்கச்சிக்கு message அனுப்பினன்னு கேட்டான். நிசாரும் தெரியாம அனுப்பிட்டேன்னு சொல்டான். எனக்கு ஒரே ஆச்சர்யம் ஏன் இப்படி சொன்னான்னு தெரியாம நின்னுட்டு இருந்தோம். அவங்க எங்கல அடிக்க வர நேரத்துல எங்கள காப்பாத்துறதா நினைச்சிட்டு எங்க தடியன் கார்த்தி pulsar bikeல வேகமா வந்து வண்டிய நிறுத்திட்டு. என்னடா பிரச்சினை இங்கனு கேட்டான் அவனுங்க பயந்துட்டானுங்க போல, ஒன்னும் இல்ல நாங்க கிளம்புறோம்னு சொல்லி கிளம்பிட்டாங்க.

திவ்யா இவன் கிட்ட பேசுறதே இல்லை அதான் இவன் message அனுப்பி கேட்டுருக்கான்னு எனக்கு தெரிய வந்திச்சு. என்ன பண்றது அப்புறம் தான் தெரிஞ்சுது திவ்யா ரஞ்சித் கூட தான் பேசுறா, இவன அவாய்ட் பண்ணிட்டான்னு,

இதை அவ வாயில இருந்தே கேட்கனும்னு, நான் கார்த்தியும் என் தம்பியும் திவ்யா வீட்டுக்கு அனுப்பி கேட்க சொன்னேன். அப்போ அவ பேசினதா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், இப்படியும் பொண்ணுங்க இருப்பாங்களானு தோணுச்சி.

அவ என்ன தெரியுமா பேசினா “எனக்கு நிசாரை புடிக்கலை, அவன் கூட நான் பேசினதே இல்ல, நான் ரஞ்சித் கூட கமிட் ஆயிட்டேன்னு, நிசார் ஒரு பொறுக்கி அவன எப்படி நான் லவ் பண்ணுவேன்னு சொன்னா அவ்” இத கேட்ட நிசார் மனசு எவ்வளவு கஷ்ட பட்டிருக்கும்னு எங்களுக்கு தெரியும், இத சொல்லிட்டு அவ விஷம் குடிச்சிட்டா, உடனே நிசார் கார்த்தி தான் அவள மருத்துவமனையில சேர்த்து அவ உயிர காப்பாத்துனாங்க, நன்றி கெட்ட குடும்பம் அத மனசுல வெச்சிக்காம நிசார அடிக்காத குறையா அவன அங்கிருந்து துரத்தி விட்டாங்க, என்ன பண்றது திவ்யா இப்ப உயிரோட இருக்க நிசார் தான் காரணம்னு அவளுக்கு தெரிஞ்சாலும், அவ இன்னமும் அந்த ரஞ்சித் பையன் கூட தான் சுத்துறா. நிசார் நினைச்சா அவ பேரு நாரடிச்சிருக்க முடியும், அவ அனுப்பின message, பேசும் போது ரெக்கார்ட் பண்ணது எல்லாம் இன்னமும் அவன் கிட்ட தான் இருக்கு, ஆனா எங்களுக்கு அதெல்லாம் தெரியாது, பண்ணவும் மாட்டோம்.

இப்ப நிசார் எப்படி இருக்கானு தெரியுமா, தினமும் மது கடைக்கு போய் குடிக்கிறான், ஏண்டா குடிச்சிட்டே இருக்கனு கேட்டா அவ நினைவாவே இருக்கு மச்சி தூங்க முடியலனு சொல்றான். கஷ்டமா இருக்கு அவள மட்டும் நான் ரஞ்சித் கூட பாத்தேன் அவ காலிதான். அடுத்தா கார்த்தி பத்தி சுருக்கமா சொல்றேன்..


கார்த்தி : இவனும் நல்ல தாங்க லவ் பண்ணிட்டு இருந்தான் அந்த் பொண்ணு பேரு கலைவாணி, இவங்க லவ்ல எந்த அண்ணன் பிரச்சினையும் இல்ல, கார்த்தி தான் பிரச்சினை, கலைவாணி நல்ல பேசுவாங்க எல்லாருகிட்டையும் நல்ல பழகுவாங்க, இத எந்த நாதாரினு தெரியல கார்த்தி கிட்ட தப்பு தப்பா சொல்டான்.
கார்த்தி அந்த பொண்ணு வீட்டுக்கு போய் ஒரு வாரம்ல தங்கியிருக்கான். ஆனா அவனால அவள புரிஞ்சிக்க முடியாம போச்சேனு நாங்க கவலைபட்டிருக்கோம். கார்த்தி அந்த விஷயம் கேள்வி பட்டதிலிருந்து அவ கிட்ட பேசுறது இல்ல, அவ பேச வந்தாலும் இவன் விலகி தான் போனான். அவளும் எவ்வளவோ பேசி பாத்தாலாம் இவன் மதிக்கவே இல்ல. என்ன பண்றது இவன் வாழ்க்கையை இவனே கெடுத்துக்கிட்டான்னு தான் சொல்லனும்.

கொஞ்ச நாள் கழிச்சி அவளை பஸ் நிறுத்தத்தில் சந்தித்திருக்கிறான்..

அவன் போய் அந்த பொண்ணுகிட்ட பேசி இருக்கான்... ரெண்டு பேரும் இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு எங்களுக்கு மறைமுக செய்தி கிடைச்சுது. நாங்க அத தெரியாத மாதிரியே அவன் கிட்ட பழகினோம்.. எப்பவுமே அவன் ஞாயிற்றுக்கிழமை எங்க கூட கிரிக்கெட் விளையாட வருவான் ஆனா இப்ப ஒரு மாசமா அவன் வருவதில்ல. சனிக்கிழமை இரவு கிளம்பி போனா திங்கட்கிழமை தான் வர்றான்.. என்னத்த சொல்ல எல்லாம் எங்க டீமுக்கு இருக்கிற விதி...

அடுத்ததா எங்க டீம் தூணாக இருக்கிற அருண் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கான் அவனையாவது நல்லா கரையேத்தனும் சாமி நீ தான் எங்களுக்கு அருள் புரியனும்...........

எனக்கு சரியா எழுத தெரியாது ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதுறேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க

நன்றி...!!!!

Subscribe to get more videos :