அமிதாப்பச்சனை பற்றி நம்ம ஊரில் படம் எடுத்தால் போஸ்டர் ஒட்டிய காசை கூட வசூலிக்க முடியாது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையை இந்தியில் எடுக்கப் போகிறார்களாம். அந்தளவுக்கு தைரியம் வரவழைத்திருக்கிறது ரஜினியின் கலெக்ஷன் அந்தஸ்து. சல்மான்கான் நடிக்க, அதுல் அக்னிஹோத்ரி தயாரிக்கப் போகிறாராம்.
ஆனால் கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே மழை வந்த மாதிரி, இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள் ரஜினியின் குடும்பத்தினர். அதையும் மீறி இப்படம் எடுக்கப்பட்டாலும், அது ரஜினியின் கதையாக இருக்கப் போவதில்லை. இந்த முயற்சிக்கு ரஜினியின் இரு மகள்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவரது அண்ணன் சத்யநாராயணாவும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக எங்களை தொடர்பு கொண்டு அந்த தயாரிப்பாளர் பேசி வருகிறார். ரஜினி உட்பட யாருக்குமே இதில் விருப்பமில்லை. மற்றவர்களை போல கஷ்டப்பட்டுதான் ரஜினியும் முன்னேறினார். உண்மை கதையை படமாக்கும் போது நிறைய கஷ்ட நடஷடங்கள் இருக்கும். தேவையில்லாத செய்திகள், காட்சிகள், சித்தரிப்புகள் இடம்பெறும் ஆபத்து உண்டு. அது குடும்ப வாழ்க்கையில் வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்தலாம். ரஜினி நிம்மதியை விரும்புகிறவர். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய கதையை படமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற முயற்சியில் யாரும் இறங்கக் கூடாது. எனது தம்பியின் விருப்பமும் இதுதான் என்கிறார் சத்யநாராயணா.
இதுக்கு பிறகுமா நடக்கும்?
மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய www.tamilcinema.com என்ற இணையதளத்தை பார்க்கவும்
மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய www.tamilcinema.com என்ற இணையதளத்தை பார்க்கவும்