Tuesday, October 11, 2011

சிம்புவை பார்த்தால் பயமா இருக்கு - ஹன்சிகா மோத்வானி..!

சிம்புவுடன் நடிக்க ரொம்பவே பயமாக இருக்கிறது என்று வேட்டை மன்னன் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியிருக்கிறார். பெரிய ஓப்பனிங்குடன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தாலும், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் என அடுத்தடுத்து தோல்விப்படங்களாகி விட்டதால் ராசியில்லாத நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார் ஹன்சிகா.


தற்போது விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், அந்த படத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறார். இந்நிலையில்தான் சிம்புவுடன் வேட்டை மன்னனில் ஜோடி சேரும் வாய்ப்பு அம்மணிக்கு கணிந்துள்ளது. படத்தில் சிம்புவுக்கு இரண்டாவது நாயகியாக கமிட் ஆன ஹன்சிகா, இப்போது முதல் நாயகியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் நடிப்பது பற்றி ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், “வேட்டை மன்னன் தமிழில் எனக்கு மிக முக்கிய படம். காரணம், கதைப்படி எனக்கு ஹீரோவுக்கு சமமான ரோல். சிம்புவுடன் நடிப்பது ரொம்பவே பயமாக இருக்கிறது.

காரணம் அவருடைய டான்ஸ்க்கு முன்னால், என்னால் ஆட முடியுமா என்ற பயம் தான். அவர் ஒரே டேக்கில் நடனமாடி விடுவார் ஆனால் நான் எத்தனை டேக் வாங்குவேன் என்று எனக்கே தெரியவில்லை. மற்றபடி சிம்புவுடன் நடிப்பதில் எந்த சிரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Subscribe to get more videos :